- · 3 friends
-
B
3 followersS
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும்
மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப்
போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்
பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும்
தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ
கீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
கீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும் .
கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை :
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய் :
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்று நோய்கள் :
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
வயிற்றுப்புண் :
1 டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி :
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
சொறி, சிரங்கு :
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
வெள்ளைப்படுதல் :
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
கீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்.
அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.
உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துக் கொண்டது. உடனே மனம் உடைந்துப் போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது.
மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன.
எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான்.
மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி... எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.
அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்த சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே.
என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவு தான்" என்றான்.
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்றுக் கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்.
அப்போது தான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.
ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
எடிசன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். தன்னுடைய அரிய கண்டுபிடிப்பான மின்சார பல்பு இந்த உலகத்தில் எத்தனை மாற்றங்களை உண்டாக்கப் போகிறது. இரவைப் பகலாக்கப் போகிறது'
என்பதை நினைக்கும்போதே எடிசனின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது..
சரி..இதை முதலில் நண்பர்களுக்கும் அருகே இருக்கிற அறிஞர்களுக்கும் வெளிப்படுத்துவோம் என முடிவு செய்தார்.
அனைவரையும் அழைத்து விளக்கம் தர ஆயத்தம் செய்தார். அந்த அறையில் உள்ளவர்கள் எடிசனின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்தனர்.எடிசன் தன் கண்டுபிடிப்பான பல்பு பற்றி சொல்லச் சொல்ல அவர்களின் ஆவல் அதிகரித்தது. எடிசன் தன் உதவியாளரை அழைத்து ,பக்கத்திலே இருக்கிற ஆய்வகத்திலிருக்கும் 'பல்பை' எடுத்துவரச் சொன்னார்.
.உதவியாளர் ஆய்வகத்திற்குச் சென்று மிக்க கவனத்துடன் அதனை எடுத்துவந்தார். எடிசனும் அறிஞர்களும் இருக்கும் அறையின் வாசலுக்கு வரும்போது அவர் கையிலிருந்து நழுவி ..கிழே விழுந்து 'படார்'..என பல்பு உடைந்தது..அனைவரும் பதறிப் போனார்கள். எடிசன் நிதானமாகச் சொன்னார்
"பிரச்னையில்லை..இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்தீர்கள் என்றால் மீண்டும் அதனைத் தயாரித்துவிடுவேன்.
அதனைத் தயாரிப்பதற்கான பொருட்கள் என்னிடம் உள்ளன ..அதுவரை பொறுத்திருங்கள்." என்று சொல்லிவிட்டுத் தன் ஆய்வகம் சென்றார்.
ஒருமணி நேரம் கழித்து வந்தார்.
"வெற்றிகரமாகத் தயாரித்துவிட்டேன்.."என்று சொல்லி, அதே தன் உதவியாளரை அழைத்து, "ஆய்வகத்திலிருந்து பல்பை எடுத்துவாருங்கள் " என்றார். அனைவரும் "அவரை அனுப்புகிறீர்களே இது சரியா?"..என்று கேட்டனர்.
அப்போது எடிசன் சொன்னார் ..
."பல்பு உடைஞ்சா அதை மீண்டும் செய்துவிடலாம். ஆனால் ஒருவரின் மனசு உடைஞ்சா அதை சரி பண்ண யாராலும் முடியாது.!"
எத்தனை பேர் மனசை உடச்சிருப்போம் . அவர்களைச் 'சரியான பல்பு'ன்னு கேலியும் செய்கிறோம். மாறுவோம்.
மேஷம்
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். கல்வி பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணத்தில் மித வேகம் நல்லது. கூட்டு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அறப்பணிகள் குறித்த செயல்திட்டத்தை அமைப்பீர்கள். மாற்று மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
மனதளவில் சிறுசிறு மாறுதல்கள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதளவில் சிறுசிறு இறுக்கமான சூழல்கள் உருவாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
பூர்விக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உயர் கல்வி முடிவுகளில் ஆலோசனை வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பொது இடங்களில் பொறுமையை கையாளவும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். பங்கு வர்த்தகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபார ரீதியான அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
வருமான வாய்ப்புகள் மேம்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். முதலாளி வகையில் ஒத்துழைப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய தொழில் தொடர்பான ஆயத்த பணிகள் கைகூடும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியம் தொடர்பான எண்ணம் கைகூடும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வருமானத்திற்காக இடம்பெயர்தல் சிலருக்கு உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.1.2026.
இன்று காலை 11.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று மாலை 06.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று இரவு 09.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.
இன்று காலை 11.43 வரை வணிசை. பின்னர் பத்தரை
இன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் மாலை 06.06 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நாளைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சமூக ஊடக பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை என ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, உக்ரைனின் மறுசீரமைப்பு தொடர்பான கனடாவின் சிறப்பு பிரதிநிதி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்ததுடன், “வரும் வாரங்களில்” நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளிநாட்டு அரசாங்கத்துக்கான ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொண்ட உடனேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஒழுக்க நெறி விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.
கணவன்- மனைவியான தம்பதிகள் ஜோடிக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு திருமணமான மருமகன்கள் ஆகியோருக்கும் சேர்த்து மூன்று ஜோடிக்குமாக மூன்று வீடுகள் கட்டிக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் மாமியாருக்கு மூன்று மகள் மற்றும் மருமகனுக்கு சொத்தில் எந்த அளவு பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைவில் வந்தது. எனவே அவர்கள் மூவருக்கும் சோதனை வைக்க விரும்பினார்.
முதல் நாள் அன்று வீட்டின் மூத்த மருமகனை அழைத்துக் கொண்டு மருமகனே!என்னை இங்கிருக்கும் ஏரியில் நம்முடைய படகில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.
மருமகனும் மாமியாரை அழைத்துக் கொண்டு படகில் சென்றார்.ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார் மருமகன் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரைப் படகில் ஏற்றிக்கொண்டு முதல் உதவி செய்து கரைக்கு கூட்டி வந்தார்.
மறுநாள் காலையில் எழுந்து வாசல் தெளிக்கும் சமயம் வாசலில் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ஸ்டிக்கர் எழுதி புத்தம் புதிய மாருதி 800 கார் நின்று கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு இரண்டாவதாக இருக்கும் மருமகனை மாமியார் அதேபோல் அழைக்க விவரம் தெரியாத மருமகனும் அதுபோலவே மாமியாரை ஏரியில் படகில் அழைத்துச் சென்றார்.
நடு ஏரியில் செல்லும் சமயம் வழக்கம் போல மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார். மருமகனும் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரை தாங்கி தூக்கி பிடித்து படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.
மறுநாள் காலையில் மருமகன் எழுந்து வாசல் தெளிக்க வந்து பார்க்கும் சமயம் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ரெனால்ட் க்விட் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது
இரண்டு நாட்களுக்கு பின்னர் கடைசி மருமகனுக்கு சோதனை! அதேபோல மருமகன் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் கடைசி மருமகன் ரொம்ப யூத் என்பதால் மாமியார் சற்றே அதிக சந்தோசமாகவே நடனமாடி ஏரியில் விழுந்து விட்டார்.
மருமகன் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். மாமியார் காப்பாற்றுங்க மாப்பிள்ளை! காப்பாற்றுங்க மாப்பிள்ளை! என்று கத்தியும்,கதறியும் மருமகன் ஒன்றும் செய்யவில்லை.
பிள்ளையா பெத்து வளர்த்து வச்சுருக்குறே?என்றவாறு கடுப்பில் அமர்ந்துவிட்டார்.சிறிது நேரம் கழித்து மாமியார் அடங்கியதும் மாமியாரை படகில் எடுத்துப் போட்டுக் கொண்டு கரை வந்து சேர்ந்து விட்டார்.
மறுநாள் காரியம் முடிந்தது. மூன்றாம் நாள் காலை கதவு திறந்து பார்த்ததும் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள புகாட்டி கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது எனதருமை இன்னுயிர் மருமகனுக்கு மாமனாரின் அன்பு பரிசு! என்று எழுதி இருந்தது
பேச்சாளர் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு சண்டை. மனைவி கணவன் கிட்ட உங்களுக்கு என்ன நீங்க ஜாலியாக ஒவ்வொரு ஊராக பேசுகிறேன் என்று ஊர் சுற்றுகிறீர்கள் . நாங்க வீட்டில் கிடந்து சாக வேண்டி இருக்கு.
சண்டை அதிகம் ஆக இருவரும் பேசாமல் இருக்க.
அப்பொழுது அவன் நண்பன் வீட்டுக்கு வந்தான். அங்கு இருக்கும் சூழலை புரிந்து கொண்டவன் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்க, கணவன் சொல்வான் என்று மனைவியும் மனைவி சொல்வாள் என்று கணவனும் பேசாமல் இருக்க,
பொறுமை இழந்தவன் நண்பனை பார்த்து இங்க பாருடா இந்த சண்டைக்கெல்லாம் ஒரே தீர்வு நீ எந்த ஊர் சென்றாலும் உன் மனைவியை கூட்டிட்டு போ! எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் என்று தீர்ப்பு சொல்ல.
குஷியான நண்பனின் மனைவி இருங்க உங்களுக்கு நான் ஃபில்டர் காஃபி போட்டு எடுத்து வாரேன் என்று சொல்லிட்டு வேக வேகமாக சமையல் அறை நோக்கி செல்ல.
அமைதியாக இருந்த கணவன் அட சாண்டாளா பிரச்சினையின் ஆரம்பமே நான் அவர்களை வெளியூர் கூட்டி செல்லாதது தான் ஒரு காபிக்கு அவ பக்கம் தீர்ப்பை சொல்லிட்டையே, என் கிட்ட கேட்டிருந்தா நான் உனக்கு வெளியில் டிஃபன் வாங்கி கொடுத்து இருப்பேன் என்றான் வருத்தத்துடன்.
வாய்ப்புண்களின் சில வகைகள் உண்டு. வாயின் ஓரத்தில் புண்கள் வருவது, கீழ் மற்றும் மேல உதடுகளின் மேல் மற்றும் உள்புறத்தில் புண் வருவது என பல விதங்கள் உண்டு.
சிலசமயங்களில் இந்த வாய்ப்புண்கள் லேசான வலியுடன் வரும். சில சமயங்களில் வீக்கங்கள் ஏற்படும். இந்த வாய்ப்புண் சரியாக கிட்டதட்ட ஒரு வாரம் பிடிக்கும். குறிப்பாக வீட்டிலுள்ள சில பொருள்களை பயன்படுத்தி எப்படி வாய்ப்புண்ணை சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் தேன் :
தேனில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது.
இது தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
அதனால் வாய்ப்புண் இருக்கும்போது இந்த இடத்தில் சிறிது தேன் தடவி விட்டுவிடுங்கள். தேன் அப்ளை செய்து சில நாட்களிலேயே வாய்ப்புண் சரியாகும். அந்த இடத்திலிருக்கும் தழும்பும் மறைந்து வடுக்கள் இல்லாமல் சருமத்தை மென்மையாக மாற்றும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் மிக அதிக அளவில் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உண்டு. இது உடலில் இருக்கும் காயங்கள் மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.
அதேபோல தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகளும் நிறைந்திருக்கின்றன. இவற்றில் உள்ள மருத்துவப் பண்புகள், வாய்ப்புண், வலி மற்றும் வீக்கத்தை சரிசெய்ய உதவும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் துளசி இலைகள் :
துளசி இந்திய பாரம்பரியத்தில் வழிபாட்டுக்கு உரியதாகவும் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியதாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆயுர்வேதத்தில் துளசியை வைத்து நிறைய தெரபி சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் ஹீலிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் பத்து துளசி இலைகளை வாயில் போட்டு மென்று பின்பு சிறிது தண்ணீர் குடித்துவிட வேண்டும்.
இதை தொடர்ந்து சில நாட்கள் செய்து வரும்போது வாய்ப்புண் சரியாகும். இது வாய்ப்புண் மட்டுமல்ல, மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சளியைக் கூட சரிசெய்து விடும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் மஞ்சள் :
இந்திய பாரம்பரிய உணவுகள் பெரும்பாலானவற்றில் பயன்டுத்தப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆன்டி - செப்டிக் மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் கொண்ட மஞ்சள் பல்வேறு வகையான தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. குறிப்பாக வாய்ப்புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக இது செயல்படும்.
இரண்டு சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து சில துளிகள் தண்ணீர் விட்டு குழைத்து பேஸ்ட்டாக்கி அதை காலை மற்றும் இரவு படுக்கச் செல்லும்முன் வாய்ப்புண்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வர வேண்டும். இப்படி செய்து வரும்போது ஒரு சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
முகப்பருக்களுக்கு காரணம்
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். இவை தவிர வெளியில் செல்லும் போது முகத்தில் படியும் தூசுகள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கிவிடும்.
பருக்களைக் கிள்ளி அல்லது கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புண்டு என் பதால் இயன்ற அளவில் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி.
பொடுகுத்தொல்லை, மலச்சிக்கல், அடுத்தவர் உபயோகித்த சோப், டவல், படுக்கையை பகிர்தல், சுகாதார மில்லாத நீர், அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம், செரிமான கோளாறு, முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், போதிய நீர் குடிக்காதது, இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இதற்கு காரணமான சொல்லலாம்
இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் கண்டிப்பாக முகப்பருக்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக் கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தக்காளி
பழுத்த தக்காளியைக் கூழ்போல் மசித்து கொள்ளவும். சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். மசித்த தக்காளி கூழை எடுத்து முகத்தில் கீழி ருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகப் பருக்கள் வருவதைத் தடை செய்யும்.
பூண்டு,வெங்காயம்
பூண்டு, வெங்காயச்சாறு இரண்டுமே முகப்பருவை உண்டாக்கும் அழுக்குகளை நீக்கும் வல்லமை கொண்டது. பூண்டை நசுக்கி சாறு பிழிந்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு தேய்த்து வந்தால் முகப்பரு பெரிதாகாமல் மறையும். இதே போன்று சின்ன வெங்காய சாறையும் தடவி வரலாம்.
வாழைப்பழத்தின் தோல்
வாழைப்பழத்தின் தோலுடன் பசுவின் பாலேடு அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வரவும். தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும். கருமை நிறமும் தங்காது.
கிராம்பில் உள்ள சத்துக்கள் :
கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே,வைட்டமின் சி, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களோடு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு கிருமி நாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
கிராம்பில் 70 முதல் 90% வரை யூஜெனால் என்ற பொருள் உள்ளது. அதேசமயம் அசிடைல், யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்ற எண்ணெய் பொருட்களும் அடங்கியுள்ளன.
இந்த கிராம்பு எண்ணெய் பற்பசை தயாரிப்பிலும், பல் சிகிச்சைக்கும், மயக்க மருந்திலும் , சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரையின் அளவை சீராக்க கிராம்பு :
இன்றைய இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் ஏராளம். இது ஒரு வளர்சிதை மாற்றக் காரணியால் ஏற்படும் பிரச்சினை என்பது நமக்குத் தெரியும்.
ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கு அடிப்படையான விஷயமே கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தச் செய்வது தான். அதை உணவில் மூலம் தான் சிறப்பாக செயல்படச் செய்ய முடியும். அதில் கிராம்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கிராம்பு :
கிராம்பில் உள்ள வைட்டமின் சி உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய காலக்கட்டத்தில் இதனை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பல் பிரச்சனைகளை தீர்க்க கிராம்பு :
கிராம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்வதோடு, பற்களில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
எனவே பல் வலி, ஈறுகளில் வலி இருந்தால் அந்த இடத்தில் கிராம்பு வைப்பது சிறந்தது. அதேபோல் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். கிராம்பை பொடி செய்து, அதை சிறிதளவு எடுத்து வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு கிராம்பு :
கிராம்பில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது.
இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கல்லீரலை சுத்தம் செய்வதோடு. கல்லீரலில் படியும் கொழுப்புக்களையும் குறைத்து கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை தீர்க்க உதவியாக இருக்கிறது.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரிசெய்ய :
காலையில் கிராம்பை உட்கொள்வதால் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது.
இதனால் வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
செரிமானத்தை இலகுவாக்குவதால் வயிறு மந்தம். வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும்.
எடை இழப்புக்கு உதவும் கிராம்பு :
கிராம்பில் உள்ள சாறு அதிக கொழுப்பின் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
கிராம்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பை குறைக்க முடியும்.
நம்முடைய உடல் எடை மற்றும் கல்லீரல் கொழுப்பைக் குறைக்க முடியும். இதனால் உடல் எடை இழப்பில் கிராம்பு மிக முக்கிய பங்காற்றுகிறது.
எலும்புகளின் வலிமைக்கு கிராம்பு :
கிராம்பில் உள்ள ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் ஆகியவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
நம்முடைய தினசரி உணவில் கிராம்பை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதோடு, மூட்டு வலி ஆகியவற்றைக் குறைக்கச் செய்யும்.
அற்புதங்கள் நிறைந்த கிராம்பு :
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
தலைவலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்காக ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணித்து பாக்டீரியாக்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
யாரெல்லாம் கிராம்பு சாப்பிட கூடாது?
கிராம்பு அழற்சி இருப்பவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது. இவர்கள் கிராம்பு சாப்பிடுவது அல்லது அதன் எண்ணெய்யை சருமத்தில் தடவுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கல்லீரல் நோய் ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு அல்லது இரத்தம் உறைதல், நோயெதிப்பு சக்தி பலவீனம் அடைதல் அல்லது உணவு அழற்சி இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அதேபோல் கிராம்பு மாத்திரை க்ரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். இது அளவு அதிகமாக்கி பாதிப்பை உண்டாக்கும்.
கிராம்பை எப்படி சாப்பிடலாம்?
கிராம்பை அப்படியே வெறும் வாயில் போட்டு லேசாக கடித்து, அப்படியே வாயில் அடக்கி வைத்துக் கொண்டு, அப்படியே அதன் உமிழ்நீரை விழுங்கிக் கொள்ளலாம். இதுதான் கிராம்பு சாப்பிட மிகச்சிறந்த வழி.
கிராம்பை வெறும் வாயில் சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் ஆரோக்கியமாக அமையும். குழந்தைகளுக்கு உணவு வழியாக கிராம்பை சேர்க்கலாம்.
கிராம்பை எப்போது சாப்பிட வேண்டும்?
கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.. ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது இரட்டிப்பு பலனை அளிக்கிறது.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 கிராம்பை மென்று சாப்பிட வேண்டும்.
பின் ஒரு கிளாஸ் சூடான நீரைக் குடிக்கவும். இதனால் இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுப் பிடிப்புகள், முதுகுவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.



















