·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1098
  • More

என்ன ஒரு அழகான நடை

நேர்த்தியான நடைபயிற்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

தேவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“முட்டாளா நீங்க? தனக்காகவும் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. நீங்களெல்லாம் ஏன் வேலைக்கு வரீங்க வந்து எங்க உயிரை எடுக்கறீங்க” இன்றைக்கும் கண்டபடி திட்டினார் மேனேஜர் சிவா.

என் சர்வீஸ் என்ன? படிப்பென்ன? இந்த ஆபீஸில் நான் தான் மேனேஜராகி இருககனும். திடீரென சிவாவை வேறு ப்ராஞ்சிலிருந்து இங்கே மாற்றி மேனஐராக்கி ஆபீஸையே கலக்கி விட்டார்கள்

சிவாவை மேனேஜராகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆனால் தன் மிரட்டலாலும், அதிகாரத்தாலும், வசைச்சொற்களாலும் எல்லோரையும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் ஆட்டிவைத்துக்கொண்டிருந்தான்.

அதவும் தேவியை வேலை தெரியாதவள் என்று காட்ட, தினமும் ஏதாவது தப்பை கண்டு பிடித்து வெளிப்படையாக திட்டுகிறார். றார் என்ன றான். அவன் மூஞ்சியும், முகரையும்.

“உங்களை என் போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணிணாங்களாமே! குட் ஜோக் நல்லவேளை. ஆபீஸ் பிழைச்சது” என்பான் தினம் ஒருமுறையாவது.

ஆபீஸில் அனுதாபப்பட்டார்களே தவிர, வெளிப்படையாக ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை

தேவிக்கு எப்படியாவது சிவாவுக்கு பதிலடி கொடுக்கனும்னு வெறி!

கணவன் மாதுவைக்கேட்டதும் அடி பிச்சிடுவோமா என்று திருப்பிக்கேட்டான்

ஐயோ என் வேலை போயிடும் என்று அலறி நானே பாத்துக்கறேன் என்றாள்.

பலத்தை வைச்சு ஜெயிக்க முடியலைனா பலவீனத்தை வைத்து ஜெயிக்கலாமே!

சிவாவின் பலவீனமென்ன? பணம்.

சிவா ஒரு கேம்ப்ளர், குடிகாரன். பணம் அதிகம் தேவைப்படும் ஆள் கம்பெனிகளுக்கு விலை கம்மியாகவும், அட்வான்ஸ் டெலிவரி தருவதாகவும் ஒரு கிசுகிசு.

தன் தோழி கல்பனா கம்பெனியில் முதலில் விசாரித்தாள் தேவி.

கல்பனா வகையாய் ஆதாரத்தோடு சீக்கிரமா சப்ளை செய்ததற்கு சிவாவுக்கு லஞ்சம் கொடுத்தோம் என்றாள்.

இருக்கிற கஸ்டமர்ஸ் மொத்தம் 420. சிவா வந்ததிலிருந்து சப்ளை நடந்த கம்பெனிகள் இருநூற்றுக்கும் மேல்.

தேவி தன்னுடைய தொடர்புகளை வைத்து விசாரித்ததில் சிவா மார்க்கெட்டில் எக்கச்சக்கமாய் விளையாடியிருந்தான்.

கிட்டத்தட்ட 50 கம்பெனிகளில் சிவா பணமாகவும் பைக், மற்றும் காராகவும் லஞ்சமாக வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமித்துப்போனாள் தேவி.

எல்லா ஆதாரங்களையும் திரட்ட 20 நாட்களாயின.

அவைகளை ஒரு ஃபைலாக்கி, மூன்றுநாள் லீவு போட்டு ஹெட் ஆபீஸூக்கு சென்று அட்மின் ஹெட்டிடம் கொடுக்க, மெளனமாய் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் பேசுவதாயும் அடுத்த நாள் காலைவரை வெய்ட் பண்ணுமாறும் கூறினார்.

சரி என்று தலையாட்டினாள் தேவி

அடுத்த நாள் வெகு சீக்கிரமே ஆபீஸூக்கு வந்துவிட்டாள் தேவி.

ரிஷப்ஷனில் முதலாளி கூப்பிடுவதாய் சொல்ல, இதுவரை முதலாளியை பார்த்ததில்லை. சரியான வெகுமானம் கிடைக்கப்போகிறது என அகமகிழ்ந்தாள்.

கனிவான பார்வையில் “சொல்லுங்கம்மா” என்று கனிவாய் பேசினார்.

தேவி, சிவாவை பற்றியும், ஆபீஸில் அவர் மற்றவர்களை நடத்தும் விதம் பற்றியும் விபரமாய் சொல்லி, சிவா வாங்கிய லஞசம் பற்றிய முழு டிடெயிலை அட்மின் ஹெட்டிடம் தந்ததாகவும் சொல்ல...

“பார்த்தேன் படித்தேன்” என்றார்.

“இவராலே நம்ம கம்பெனி பணமும் பேரும் போகுது” என்றாள்.

“என்ன செய்யலாம் சொல்லுங்க”?

“டிஸ்மிஸ் பண்ணனும் ஸார்”

“நான் சொல்வதை கேளுங்க. இந்த ஃபைலை தயார் பண்ண எத்தனை நாளாச்சு?” கனிவாய் கேட்டார்.

“கிட்டத்தட்ட ஒரு மாசமா கடுமையா உழைச்சு இதே வேலையாயிருந்தேன்” பெருமையாய் சொன்னாள்.

“அப்ப நீங்க உங்க வேலையை பாக்கலை.”

“ஸார்”

”இதெல்லாம் யாருக்காக செஞ்சீங்க?”

“கம்பெனிக்காக. அதன் நல்ல பேருக்காக”

“கிடைச்சுதா? இல்லை. நீங்க செஞ்ச வேலையில் கம்பெனி பெயர் கெட்டதுதான் மிச்சம். உங்க வேலையை பாக்காத ஒழுங்கீனம். மேலதிகாரிக்கு பணியாத திமிர் இது. மற்றவர்களுக்கும் பரவும் உங்களை தண்டிக்காம விட்டா:”

தடுமாறிப்போனாள் தேவி.

“ஸார் சிவா கெட்டவர் குரலில்” பயம்.

“தெரியும். அவர் லஞ்ச ஊழல் பேர்வழி. இங்கேயும் இப்படித்தானிருந்தார். ஒரு தண்டனையாகத்தான் அவரை டிரான்ஸ்ஃபர் செஞ்சோம். அப்படியும் அவர் திருந்தலை. அவர் மேல் ஆக் ஷன் உறுதி. அதற்காக உங்களது ஒழுங்கீனத்தை ஒத்துக்க முடியாது” கண்டிப்பாக பேசினார்.

“”ஸார்”

“உங்களுக்கு ஒரு மெமோ கொடுக்க சொல்லியிருக்கேன். ஒரு இன்கிரிமென்ட் கட் பண்ணியிருக்கேன்” என்று சொல்ல...

“ஸார் தெரியாம...”

முடிக்கு முன் “நீங்க போகலாம்” என்று எழுந்தார்.

-மாதவி

  • 44
·
Added article

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு மைல்கல் படமாக கருதப்பட்ட பராசக்தியில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார்.

“சுதா கொங்கராவின் முந்தைய படங்களில் இருந்த தாக்கம் இதில் முழுமையாக இல்லை” என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தயாரிப்பு தரப்பு இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் டிராக்கர்களின் தரவுகள் படி பராசக்தி ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 கோடி தான் வசூலித்துள்ளதாம். பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்ததும், புதிய படங்கள் திரைக்கு வந்ததால் பராசக்தியின் வசூல் வேகம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் கோடிகளில் வந்த வசூல், தற்போது லட்சங்களாக சரிந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராசக்தியின் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் 28 நாட்களுக்குள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகினாலும், பராசக்தியை 48 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், படம் பிப்ரவரி மாத இறுதியில் தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படம் முன்கூட்டியே ஓடிடிக்கு வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி பராசக்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • 47
·
Added article

பிரபல ஹொலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா தனது 71ஆவது வயதில் காலமானார்.

"ஹோம் அலோன்" (Home Alone) மற்றும் "ஷிட்ஸ் கிரீக்" (Schitt’s Creek) போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளில் நடித்து முத்திரை பதித்த அமெரிக்க நடிகை சுகயீனம் காரணமாக நேற்று (30) அவரது வீட்டில் வைத்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1990களில் வெளியான 'Home Alone' திரைப்படத்தில் சிறுவன் கெவினின் தாயாராக நடித்ததன் மூலம் இவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தார்.

அண்மைக் காலத்தில் 'Schitt’s Creek' தொடரில் மோய்ரா ரோஸ் (Moira Rose) என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எம்மி விருது (Emmy Award) மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார்.

  • 51
·
Added a news

கனடாவின் டொரன்டோவில் வசிக்கும்இலங்கை தமிழர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றபோது ஒரே நகை வெவ்வேறு கடைகளில் எடைகள் காட்டப்பட்ட சம்பவம் தங்க நகையை கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக அந்த நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.

அதேசமயம் ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான எடையான நான்கு கிராம் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தை நிலவரப்படி 0.1 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 13.68 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 20 கனேடியன் டாலர்கள் ஆகும்.

ஒரு கடையில் 0.2 கிராம் எடை குறைவாக காட்டப்பட்டால் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சுமார் 40 கனேடியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நகைக்கடைகளில் உள்ள எடை இயந்திரங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு காலிப்ரேஷன் (Calibration) செய்யப்பட வேண்டியது அவசியம்.

சிறிய அளவிலான எடை குறைப்பு கூட அதிகப்படியான தங்கத்தை விற்கும் போது அல்லது வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே தங்க நகைகளை வாங்கும்போது மிகவும் அவதானமாக அவதானித்து வாங்குங்கள்.

  • 51
·
Added article

நடிகை ஸ்ருதிஹாசன், துல்​கர் சல்​மான் ஜோடி​யாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். தெலுங்​கில் உரு​வாகும் இப்​படம் தமிழ் உள்​ளிட்ட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​திலிருந்து அவருடைய தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

ஸ்ருதிஹாசன் அளித்த பேட்​டி​யில் கூறியிருப்பதாவது: பாடு​வது, இசையமைப்​பது, எழுது​வது, நடிப்பு ஆகிய துறை​களில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இதற்​கு கலைகளில் பல்வேறு திறமை கொண்ட பெற்​றோருடன் வளர்ந்​தது காரணம். நான் வளர்ந்த சூழல் எனக்கு அதைத் தந்​திருக்​கிறது. நான் விரும்​பிய விஷ​யங்​களைச் செய்ய அனு​மதி வழங்​கியது.

2018-ல் நடிப்​பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்​துக் கொண்​டது பற்றி கேட்​கிறார்​கள். அந்த இடைவெளி,​ நான் யார் என்​பதை மறும​திப்​பீடு செய்​து, என்னை நானே ஆராய்​வதற்​கான நேர​மாக இருந்​தது. சில மனநலப் பிரச்சினை​களுக்​காக​வும் நேரம் எடுத்​துக்​கொண்​டேன்.

நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யான பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன். அந்த பதற்​றத்​துடன் அன்​றாட நடவடிக்​கைகளைத் தொடர முடிய​வில்​லை. நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை. அந்த இடைவெளி​யில், லண்​டனில் இருந்​தேன். அங்கு இசை​யின் மூலம் என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன்.

தின​மும் என் உடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுதப் பயிற்சி செய்​வது, பின்​னர் எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் அந்த இசையைச் சோதித்​துப் பார்ப்​பது என என் வாழ்க்​கையை அமைத்​திருந்​தேன்.

இப்​போது ஒரு கலைஞ​ராக இருப்​பதை மிக​வும் விரும்​பு​கிறேன். அது மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது. வழக்​க​மான கதா​பாத்​திரங்​களை விடுத்து சவாலான வேடங்​களில் நடிக்​க​வும் ஆர்​வ​மாக இருக்​கிறேன். இவ்​வாறு ஸ்ரு​திஹாசன் கூறி​னார்.

  • 57
·
Added a news

சீனா​வுடன் வர்த்​தகம் செய்ய கனடா ஒப்​பந்​தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்த ஒப்​பந்​தப்​படி கனடா வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டால், கனடா பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என எச்சரித்தார்.

இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் கல்ப்​ஸ்ட்​ரீம் ஏரோஸ்​பேஸ் நிறு​வன விமானங்​களுக்​கு,கனடா அங்​கீ​காரம் வழங்​க​வில்லை என்​றால், அமெரிக்​கா​வில் விற்​பனை செய்​யப்​படும் கனடா தயாரிப்பு விமானங்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்​சரிக்கை விடுத்​து உள்​ளார்.

மேலும், ‘‘க​ன​டா​வில் தயாரிக்​கப்​படும் அனைத்து விமானங்​களுக்​கான அங்​கீ​காரத்தை ரத்து செய்​வேன் . பம்​பார்​டியர் நிறு​வனத்​தின் 150 குளோபல் எக்​ஸ்​பிரஸ் விமானங்​கள் அமெரிக்​கா​வில் பதிவு செய்​யப்​பட்டு இயங்​கு​கின்​றன. இவற்​றின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும்’’ என கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் கல்ப்​ஸ்ட்​ரீம் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், கனடா​வின் பம்​பார்​டியர் விமான நிறுவனத்​துக்கு போட்டியாக உள்ளது. இதனால் கல்ப்​ஸ்ட்​ரீம் நிறு​வன விமானங்​களுக்கு கனடா அங்​கீ​காரம் அளிக்​காமல் உள்ளது.

  • 55
  • 52
  • 55
·
Added article

சுந்​தர்​.சி இயக்​கத்​தில், மதகஜ​ராஜா, ஆம்​பள, ஆக் ஷன் ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார் விஷால். இதில் மதகஜராஜா, ஆம்பள ஆகிய படங்​கள் வரவேற்​பைப் பெற்றன. ‘மதகஜ​ராஜா’, படம் உரு​வாகி 12 வருடத்​துக்​குப் பிறகு வெளி​யாகி வெற்றி பெற்​றது. இதையடுத்து சுந்தர்.சி, விஷால் மீண்​டும் இணை​யும் படம் ‘புருஷன்’.

இதன் டைட்​டில் புரமோ வீடியோ சமீபத்​தில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. ஆக் ஷன் கலந்த காமெடி கதைக் களத்​துடன் உரு​வாகும் இப்​படத்​தில் தமன்​னா, யோகி பாபு ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஹிப்​ஹாப் ஆதி இசையமைக்​கிறார். அவ்னி சினி மேக்ஸ் சார்​பாக குஷ்பு​வும் அவரது மகள் அனந்​தி​தா​வும் தயாரிக்​கின்​றனர்.

இந்​த படத்​தின் படப்​பிடிப்பு பிப்ரவரி .2-ஆம் தேதி கொல்​கத்​தா​வில் தொடங்க இருந்​தது. இதற்​காக சுந்​தர்​.சி, விஷால் உள்​ளிட்ட படக்​குழு​வினர் இன்று அங்கு செல்ல இருந்​தனர். இந்​நிலை​யில் இப்​படத்​தின் படப்​பிடிப்பு திடீரென தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. சுந்​தர். சி-க்கு உடல்நிலை சரி​யில்​லாத​தால் படப்​பிடிப்பு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

  • 58
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு துறைகளில் சாதகமான சூழல் அமையும். சாதுரியமான செயல்பாடுகளால் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். தன விஷயங்களில் நிதானம் வேண்டும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். பயணம் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கப்பெறுவீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கடகம்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். இனம்புரியாத கனவுகள் அவ்வப்போது ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை உண்டாகும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தமான சூழ்நிலையில் மறையும். சுபகாரிய தொடர்பான பயணங்கள் கைகூடும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ரகசியமான சில ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். முயற்சிக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வாக்கு சாதுரியம் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உருவாகும். திடம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

துலாம்

ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விருச்சிகம்

வாழ்க்கைத்துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வர்த்தக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எளிமையான செயல்கள் கூட தாமதமாகி நிறைவு பெரும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

தனுசு

உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

மகரம்

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீண்ட தூர பயணம் வாய்ப்புகள் கைகூடும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கும்பம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து மூலம் லாபம் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். புத்திரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. தொழில்நுட்ப பயிற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாக தொடர்பான துறைகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 180
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை 31.1.2026.

இன்று காலை 08.02 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 03.04 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம் .

இன்று பிற்பகல் 01.05 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று காலை 08.02 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.21வரை கரசை. பின்பு வணிசை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=406&dpx=2&t=1769833543

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 187

சிலரை அதிகம் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினால்....

பின்னர்.......இப்படித்தான் ஆகும்.

  • 190

Good Morning...

  • 192
·
Added article

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

தனது நடிப்பால் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். நடிகை அனுபாமா டைட்டான ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளிக்கொண்டுப் போகிறது.

  • 399
·
Added a post

சித்தர்கள் கூறிய கற்பகத்தரு மூலிகைகளில் ஒன்று, நன்னாரி.

கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணாறுசாரி என, வேறு பெயர்களும் இதற்கு உள்ளது. நன்னாரி, கொடியாக தரையில் படரும் தாவரம்.

இதன் வேர் தான் மருத்துவ குணம் கொண்டது. நறுமணமிக்கது, இனிப்பும், சற்று கசப்பும் கலந்த சுவையுள்ளது. இந்தச் செடியின் வேரை உலர்த்தி பதப்படுத்தி தயாராவது தான், நன்னாரி சர்பத்.

பொதுவாக கோடையில் தாகத்தையும், உஷ்ணத்தையும் தணிக்கக் கூடியதாகவும், பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் இருக்கும் நன்னாரி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது; 'ஆரத்ரைட்டிஸ்' மூட்டு வலிகளையும் குறைக்கிறது.

படர்தாமரை, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது. உடலில் உள்ள வெப்பத்தை அகற்ற உதவுவதுடன், உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றுகிறது.

ரத்தத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டு அளவை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி, பாக்டீரியா தொற்றுக்களை அகற்றி, உடல் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

நன்னாரியை நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து வெயில் காலங்களில் சாப்பிட்டு வர, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். 20 கிராம் நன்னாரி வேரை இடித்து, இரண்டு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறியதும் பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகிறது. நீடித்த முகப்பரு, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் கரப்பான் போன்றவை நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து கொடுக்க, சளியால் அவதிப்படும் குழந்தைகள் விரைவில் நலம் பெறுவர்.

நன்னாரி வேர் பொடியை, தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செரிமான பிரச்னைகள் சரியாகிறது. வயிற்றுப்புண், சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் சரியாகிறது. மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்குகிறது.

நன்னாரி வேரில் காணப்படும் கிழங்கை உலர்த்தி காய வைத்து, ஊறுகாய் செய்து சாப்பிட்டால், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய், மூலம், ஒவ்வாமை சரியாகிறது. நன்னாரி வேரை பொடி செய்து, கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாப்பிட்டால், வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகிறது.

நன்னாரி இலையை நெய்யில் வதக்கி, மிளகும், இந்துப்பு மற்றும் சிறு புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகிறது.

நன்னாரியில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உடல் சோர்வு இருக்கும்போது நன்னாரி பொடியை, எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறுடன் கலந்து சாப்பிட, சோர்வு மறைந்து புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பலாம் என்கின்றனர்.

பச்சை நன்னாரி வேரை, 20 கிராம் தட்டி, 200 மி.லி., நீரில், ஒருநாள் ஊறவைத்து வடி கட்டி, 100 மி.லி.,யை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பித்த நோய், நீரிழிவு, உடல் சூடு அதிகமாவதால் வரும், மேக நோய் தீரும். சொறி சிரங்கு மறையும், ஆண்மைக்குறைவு சரியாகிறது.

நன்னாரி வேரை பொடியாக்கி, சோற்றுக்கற்றாழையுடன் கலந்து சாப்பிட விஷக்கடிகள் குணமாகிறது.

நன்னாரி, தனியா, சோம்பு இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர, உடல் பருமன் குறையும். நெல்லிக்கனி சாற்றில் நன்னாரி வேரை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட, இதயம் வலுவடையும்.

  • 407
·
Added joke

×பொண்ணாடி நீ…உன்னை என் பையனுக்கு கட்டிவைச்சதுக்கு…என் புத்தியை செருப்பாலேயேஅடிச்சிக்கணும்×

×கொஞ்சம் பொறுங்கள் அத்தை… செருப்பையும்…செல்போனையும் எடுத்து வரேன்×……

×எதுக்கடிஅதெல்லாம்×….

×செல்போனில் நீங்க செருப்பாலே அடிச்சிக்கிறதை….வீடியோ எடுத்து பேஸ் புக்கிலே போட்டாக்கா லைக்ஸ் அள்ளும்×….

  • 403
·
Added a post

மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது. தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள் : எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள். இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.

உடல் எடையை குறைக்கும் : மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்டதும் உடனே வயிறு நிரம்பிவிடுகிறது.

சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது : செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது : சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது.

சருமத்தை பாதுகாக்கிறது : அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆண்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது : செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தலைமுடிக்கு நல்லது : செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

மூலத்தை குணப்படுத்தும் : மலச்சிக்கலை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது செவ்வாழைப் பழம். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கும் : செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உங்களின் இதயத்துடிப்பை லேசாக்கி உடலில் உள்ள நீர்த்தன்மையை நிலைப்படுத்துகிறது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  • 404
·
Added a post

ஒரு சிலந்தி வலையில் ஒரு கொசு சிக்கிக்கொண்டது.

கொசுவுக்குத் தெரிந்துவிட்டது தன்னுயிர் போக போகிறது என்று.

எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று பேச ஆரம்பித்தது.

கொசு: ஓ சிலந்தியே, நீ என்ன வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறாய் என்னைப் போன்ற அப்பாவிகளை சிறை பிடிக்கிறாய்.

சிலந்தி (சிரிப்பு)

கொசு: பொதுவாக வலைவிரித்து ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் தானே தேட வேண்டும்? தேடிப்பிடிக்க வேண்டும்?

அப்படிப் பார்த்தால் நீ இன்னொரு பெண் சிலந்தியைத் தானே பிடித்திருக்க வேண்டும் என்னை ஏன் பிடித்தாய், நான் ஒரு கொசு. நீயோ சிலந்தி.

சிலந்தி: (கோபத்துடன்) நீ என்ன மனிதனைப்போல பேசுகிறாய் ? நான் என்ன மனிதனா, வலைவிரித்து, துணை தேடிப் பிடிக்க?

கொசு : ஆஹா ன்…, .இவன் எதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான் போல இருக்கே? (மனசுக்குள்)

அப்படி என்றால் இரை தேடுவதற்காக வலை விரித்து இருக்கிறாயா?

நான் எல்லாம் பறந்து திரிந்து அலைந்து தான் இரை தேடுகிறேன், இப்படி உன்னைப்போல் வீட்டில் இருந்துகொண்டே இரை தேடுவதில்லை.

அதோ கீழே உட்கார்ந்து இருக்கிறானே அவனைப் போல நீ ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH)செய்கிறாயா?

சிலந்தி :அவன் ஒண்ணும் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யவில்லை. காலையிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

அவன்தான் நீ சொன்ன மாதிரி வலைவிரித்து வலைத்தளத்தில் துணை தேடிக் கொண்டிருக்கிறான்.

கொசு; நானும் இப்போதுதான் அவனைக் கடித்து விட்டு வந்தேன். வெட்டிப்பயல். சரி என்னை நீ தின்னப் போகிறாயா? என்னை விட்டு விடேன்…

சிலந்தி : முடியாது முடியாது.

கொசு : நீ தனியாக தானே இருக்கிறாய் ஒரு துணை தேடிக் கொள்ளேன். ஒரு பெண் சிலந்தி வந்து மாட்டும் வரை காத்திரு. என்னை விட்டுவிடு. நான் உனக்கு நல்ல வார்த்தை சொல்லி இருக்கிறேனே

சிலந்தி; நீ மனிதர்களை கடித்ததால் உனக்கும் அவர்கள் இரத்தம் ஏறி அவர்கள் புத்தி வந்து விட்டது. இப்படி எல்லாம் சிந்திக்கிறாய். நானே ஒரு பெண் சிலந்தியிடம் இருந்து தப்பித்து வந்து இங்கே தனியாக வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறேன்.

கொசு: நல்லதுக்கே காலம் இல்லை. அதற்கு அந்த மனிதன் கையாலேயே செத்திருக்கலாம். எனக்கு நேரமே சரியில்லை அந்த ஜோதிடரை போய் கடித்து வைக்க வேண்டும். இப்போ என்னை விட்டுவிடு. நாம்தான் நண்பர்கள் ஆகி விட்டோமே?

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே கீழே லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் மாறியது. சிலந்தியின் பேச்சு சிந்தனையைத் தூண்டியது.

உடனே மேட்ரிமோனி ஐடி ஓபன் செய்து, தப்புத்தப்பாக தன்னைப் பற்றிய ஆஹா ஓஹோவென்று தகவல் கொடுத்து வைத்திருந்ததை எல்லாம் மாற்றி உண்மைகளாக எழுதி வைத்தான்.

அப்புறம் என்ன?

அடுத்த நாளே நல்ல பெண் கிடைத்து விட்டது.

சுபம்.

இதுபோன்ற நீதிக்கதைகளை எழுதினால் மனிதன் திருந்த வாய்ப்பு உள்ளது..

  • 404
·
Added a news

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மாலை 6 மணியளவில் குயின் மேற்கு வீதி மற்றும் மெக்லாகின் வீதியில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் சாலையை கடந்து கொண்டிருந்த போது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வாகன ஓட்டுநர் விபத்தில் ஈடுபட்டதை உணர்ந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் வாகனத்தை நிறுத்திய பின்னர் ஓட்டுநர் அங்கிருந்தே ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தை் கண்டவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

  • 412
·
Added a news

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது.

இதையடுத்து, வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

டிரம்ப் மிரட்டலை தொடர்ந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை மெக்சிகோ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

  • 415
·
Added a news

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.

  • 415
  • 409
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சுணக்கம் காணப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:

எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நீடித்த குழப்பநிலை நீங்கும்.

மிதுனம்:

குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலக பணிகளில் அலட்சியம் வேண்டாம். நிதானமுடன் செயல்படுவது நல்லது.

கடகம்:

மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.

சிம்மம்:

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி:

கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்:

எடுத்த பணியை மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்:

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவேண்டாம்.

தனுசு:

சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.

கும்பம்:

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். சிலர் அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

மீனம்:

மன குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் பேசும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் அலைச்சலை தரும்.

  • 781
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026.

இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை

இன்று மாலை 04.26 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று காலை 10.03 வரை பாலவம். பின்னர் இரவு 09.02 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 6:35 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=405&dpx=2&t=1769739200

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 786