·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1504
  • More

Goose on lakeside

Comments (0)
Login or Join to comment.
  • 39
  • 37
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தக செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

ரிஷபம்

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

மிதுனம்

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாக சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

செயல்பாடுகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

துலாம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நினைத்த பணிகளை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் லாபங்கள் மேம்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ரசனைத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக மறையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகளில் இருந்த தாமதம் விலகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மீனம்

குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். திடீர் பொறுப்புகளால் மனதளவில் சில சோர்வுகள் உண்டாகும். வழக்கமான செயல்களிலும் கவனத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் சில மந்தமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 42
  • 45
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 2.5.2026

இன்று முழுவதும் பிரதமை.

இன்று அதிகாலை 04.37 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று இரவு 09.38 வரை வியதீபாதம் . பின்னர் வரீயான்.

இன்று காலை 11.57 வரை பாலவம். பின்னர் கௌலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=498&dpx=2&t=1777695250

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 54

Good Morning...

  • 56
  • 56
  • 94

_முன் சென்றது

குப்பை வண்டி🚍

_மூக்கைப் பொத்தி

முந்திச் சென்று

திரும்பிப் பார்த்தேன்...🤦

“அடடா!”

_மூக்கு இருந்ததே

ஓட்டுனருக்கும்! 🙆

உழைக்கும் ஒவ்வோர் கைக்கும்

மரியாதையுடன்...

தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்

--Dr. பிரமீளா நாகேஸ்வரராஜ்

  • 135
·
Added a post

ஜப்பானில் இருந்து ஒருத்தர் நம்ம ஊருக்கு வந்து இருந்தாராம்.

நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்.

" உங்களுக்கு எத்தனை குழந்தைகள்" அவர் விசாரித்தார்.

" ஒரே ஒரு பெண் குழந்தைதான் "

என்று நம்மூர்காரர் சொல்லி உள்ளார்.

" வயசு என்ன?" என்று ஜப்பான் .

3 வயசு என்றார் இவர்

" குழந்தையை பார்க்கணுமே"! என்று ஜப்பான் கார் கேட்டார்.

" பள்ளிக்கூடம் போய் இருக்கா" என்றார் நம்ம ஊர்க்காரர்.

ஜப்பான்காரர் உடனே மலைத்துப்

போய்விட்டாராம்.

"என்னது

மூன்று வயதிலேயே பள்ளிக்கூடம் அனுப்பி விட்டீர்களா" என்று ஆச்சரியமாக கேட்டார் ஜப்பான்காரர் .

"ஆமா அவ எல்கேஜி படிக்கிறாள்".

" அது சரி உங்க ஜப்பான் நாட்டிலே இந்த வயசுல பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டீர்களா"

என்று நம்ம ஊர்க்காரர் விசாரித்தார்

" எங்க ஊர்ல எல்லாம் ஏழு அல்லது எட்டு வயசுக்கு மேலே தான் பள்ளிக்கூடம் அனுப்புவோம்" என்று அவர் சொன்னார்..

இப்போது நம்ம ஊருகாரருக்கு

ஆச்சரியம்..

இதுக்கு அவர் விளக்கமாக சொன்னார் .

*சின்னக் குழந்தைகளின் மனசு பக்குவப்பட்ட பிறகுதான் பள்ளிக்கூடத்திற்கு எங்க நாட்டில் அனுப்புவோம்*

இந்த வயசிலே அதுக்கு பள்ளிக்கூடம் போகிற ஆர்வம் அப்போதுதான் உண்டாகும்.

ஏழு வயது வரைக்கும் அந்த பிஞ்சு மனசு அன்பையும் நட்பையும் பிற

மனித அறிமுகங்களையும் தான் அதிகமாக எதிர்பார்க்கும் .

ஒரு குழந்தை எவ்வளவு நேரம் அவங்க அம்மா கூட இருக்கு..

அதே மாதிரி எவ்வளவு நேரம் வீட்டில் உள்ள மற்றவர்கள் ...

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்...

இவங்களோட எங்க குழந்தை செலவழிக்குது.

என்பதைப் பொறுத்து தான் அந்தக் குழந்தை உடைய மனசு

விசாலமடைகிறதாம்.!

அறிவுலே அந்த வயசுக்கு ஏற்ற முதிர்ச்சி ஏற்படுது!.

வீட்டிலேயே இருக்கக்கூடிய குழந்தை,

அந்த வயசுக்குள்ள தன் வீட்டையும் மற்ற மனிதர்களையும் புரிந்து கொள்கிறது ..

இன்னும் பல விவரங்களையும் அது புரிந்து கொள்கிறது.

இந்த மாதிரி ஒரு சூழல் பள்ளிக்கூடத்திலே கிடைக்காது .

அங்கே எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுகிறார்கள்.

ஒரு குழந்தைக்கு என்று தனியாக கவனம்செலுத்துவ-தென்பது பள்ளிக்கூடத்தில் சாத்தியமில்லை .

மேலும் வீட்டில் இருக்கிற குழந்தை எல்லார்கிட்டயும் சகஜமாக பழக கத்துகிறது.

வீட்டு சூழ்நிலை மறக்க வெளியே எங்கேயாவது போகலாம்ன்னு எண்ணமும் அதற்கு உண்டாகுது .

புதுசாக பல பேரையும் பார்க்கணும் பழகனுங்குகிற ஆசையும் ஏற்படும்.

அதோடு அக்குழந்தையின்

மனமும் விசாலமாகிறத.

இதை எல்லாம் அந்த குழந்தையின்

ஏழு வயசுலே ஏற்படுகிற சமாச்சாரங்கள் .

இப்படி அந்த குழந்தையை பக்குவமடைந்த பிறகே,

பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது தான் சரியான முறை.

அதை விட்டுட்டு

ஒரு குழந்தை

என்ன ஏதுன்னு தெரிஞ்சு இதற்கு முன்னாடியே பள்ளிக்கூடத்தில் கொண்டு

போய் விட்டு அந்த குழந்தை மனசுக்கு ஒவ்வாத பல விஷயங்களையும் சமாச்சாரங்களையும் அதன் மூளைக்கு உள்ளே திணித்து மென்மையான உணர்வுகளை சிதைத்துவிடகூடாது .

இவ்வளவும் அந்த ஜப்பான்காரர் சொன்ன கருத்து.

நம்ம ஊருக்கு இது எந்த அளவுக்கு சரியாக வருகிறது? இது ஒருபக்கம் இருந்தாலும் ...

இது நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய கருத்து .

ஏனெனில்.... குழந்தை உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

" இளம்வயதிலேயே அன்பும் அரவணைப்பும் ரொம்ப முக்கியமாம்.

அதை பொறுத்துதான் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.

*சின்ன வயசிலே தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் தான் பிற்காலத்தில் ரொம்ப நல்ல நிலைமைக்கு வராங்களாம்*

ஒரு குழந்தை நல்லபடியாக வாழனும்னா நல்ல ஆகாரம் மட்டும் கொடுத்தால் போதாது..

அன்பான பாசமான அரவணைப்பும் ரொம்ப அவசியம் .

இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி பாத்து இருக்காங்க.

சில அனாதை ஆசிரமங்களில்...

நல்ல ஆகாரம் கொடுத்து

வளர்த்த குழந்தைகள்கூட சரியா வளர்வது இல்லை ஏனென்றால் அந்தக் குழந்தைகளை தொட்டு

சீராட்டி

கொஞ்சி பேசுவதற்கு தாய் என்பது யாரும் இல்லாததுதான் குறை அந்த அனாதை ஆசிரமங்களில் ..

அதனால் இறுதியாக நம்ம ஊர் தாய்மார்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

சின்ன வயசுலேயே குழந்தையை அன்பு அரவணைப்போடு வளருங்கள்...

அதுகளை ஒருபக்கம் விட்டுட்டு நீங்க ஒரு பக்கம் போயிடாதீங்க...

அப்படி போயிட்டீங்களனால்.. குழந்தை நிச்சயமாக வேறுவிதமாகத்தான் வளரும் /இருக்கும் .

  • 138
·
Added a post

பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள்…

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.

அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.

அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியானதாக இருக்கும்.

ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்.

மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்…

இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர்த் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்…

ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…

யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.

குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.

இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக...

அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.

நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித் தான். வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக் கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம்…

சோம்பியே தான் கிடப்போம்…

சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்…

கதையின் நீதி :-

அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை… பிரச்சனை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாரும் இல்லை .

  • 139
  • 145
·
Added a post

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். நல்லவர்கள் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கூட்டுத் தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மிதுனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பணவரவு உண்டு. பிள்ளைகளின் தனித்திறமை அறிந்து அவர்களை வழி நடத்துவீர். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதியவர் நண்பராவார். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப் போன மகளின் திருமணம் உடனே நடக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீக வீடு தொடர்பாக உறவுகளுக்குள் மனஸ்தாபம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: மகனின் வேலை, மகளின் திருமணம் என்று குழப்பம், அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நிதானமாக வசூலிக்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்து விற்பனை ஆகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் உங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: மின் சாதனங்களை மாற்றியமைக்க முயற்சிப்பீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புது வழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு. கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

கும்பம்: தடை நீங்கும். இழுபறியாக இருந்த பணிகள் முடிவடையும். தொட்டது துலங்கும். அரசு தொடர்பான காரியங்கள் உடனடியாக நிறை வேறும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

மீனம்: எதிலும் கவனம் தேவை. முன்கோபம் வரும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். பங்குதாரரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீர்.

  • 223
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.5.2026

இன்று இரவு 11.17 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 02.41 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று இரவு 09.21 வரை சித்தி . பின்னர் வியதீபாதம்.

இன்று காலை 10.28 வரை பத்திரை. பின்னர் இரவு 11.07 வரை பவம். பிறகு பாலவம்

இன்று அதிகாலை 02.41 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.56 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=497&dpx=2&t=1777596149

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 228

Good Morning...

  • 231
·
Added a news

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்குவெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் சிறப்பான அரசு விருந்து அளித்தனர்.

நேற்று நடைபெற்ற இந்த விருந்தில், வசந்த காலத்தின் புதிய சுவைகளும் ஐரோப்பிய தாக்கமும் கொண்ட மெனுவை மெலனியா டிரம்ப் பிரத்யேகமாக தேர்வு செய்திருந்தார். விருந்தில், கார்டன் வெஜிடபிள் வெலூட்டே' மற்றும் 'ஹார்ட்ஸ் ஆஃப் பாம்' சாலட் பரிமாறப்பட்டது.

இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகை தோட்டத்தில் இருந்து நேரடியாக பறிக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் ரிகோட்டா சீஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட 'ஸ்பிரிங் ஹெர்ப்டு ரவியோலி' வழங்கப்பட்டது.

முக்கிய உணவாக, பாரம்பரிய ஐரோப்பிய பாணியிலான 'டோவர் சோல் முனியர்' மீன் உணவு, உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி வகைகளுடன் பரிமாறப்பட்டது.

விருந்தின் இறுதியில் இனிப்பு வகையாக, தேன்கூடு வடிவிலான சாக்லேட் கேட்யூ , வெண்ணிலா பீன் கிரீம் மற்றும் வெள்ளை மாளிகையின் சொந்தத் தயாரிப்பான தேன் கலந்த ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் சிறந்த ஒயின் ரகங்களான ஹாப்கின்ஸ் ரைஸ்லிங் மற்றும் பென்னர்-ஆஷ் பினோட் நோயர் ஆகியவை இந்த உணவுகளுக்கு பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த அரசு விருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 295

மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன.....

நமது தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் தான் வாழணும்.

  • 288
  • 295

Summer

  • 293
  • 293
  • 293
  • 295
  • 292
  • 294