Ads
இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்” என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெறுகின்றன எனவும், தமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்தும் விதமாக இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Info
Ads
Latest News
Ads