இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியது ஏன்? - டலஸ் அழகப்பெரும
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
"அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்"
“அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை.
"மேலும், 2023 ஆம் ஆண்டில், இராணுவத்தில் கிட்டத்தட்ட 27,000 பேர் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்றனர், அல்லது அவர்கள் சேவையை விட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள். அதாவது ஏதோ சிக்கல் உள்ளது. அதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்."