
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தினுள் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற சட்டத்தின்படி, இந்த அறிவிப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால், மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும்.
எனினும், தேர்தலில் முன்னிலை வகிக்கும் பல உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளுக்குத் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் உள்ளூராட்சி நிறுவனங்களில், கொழும்பு மாநகர சபை அதிக கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000