
5 மாதங்களில் 19,900 ஐக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிகை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப் படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
000