500 ரூபாவை எட்டும் ஒரு கிலோ உப்பு - சந்தையில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு
சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.
இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்
000