
இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்
இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைத்து உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் ஒரு நாடு என்றும், அங்கு ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை என்றும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ டிக் குக் ஏற்கனவே கூறியிருந்தார். இந்தியாவில் ஏற்கனவே மூன்று ஆப்பிள் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், மேலும் இரண்டு தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும், ஒன்று தமிழகத்திலும் இன்னொன்று கர்நாடகத்திலும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ உடன் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை கேள்விப்பட்டேன்; இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.