கனடாவில் பலருக்கு முன்னுதாரணமாக திகழும் இலங்கைத் தமிழர்
இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கனடாவில் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார், கொழும்பை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ரோய் ரட்னவேல் என்பவரே அரசியல் கைதி என்ற நிலையிலிருந்து, கனடாவின் முதனிலை நிறைவேற்று அதிகாரி வரையில் முன்னேற்றமடைந்துள்ளார்.
போர் காரணமாக 1988ம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த ரோய் ரட்னவேல், கடுமையான அர்ப்பணிப்பு தொழில் மீது கொண்ட பக்தி போன்ற காரணிகளினால் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பிரிசினர் என்ற நூலை ரோய் வெளியிட்டுள்ளார்.
கனடாவின் மிகச் சிறந்த நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவராக ரோய் ரட்னவேல் பெயரிடப்பட்டுள்ளார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரோய், போர் காலத்தில் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கியதாகவும் அரசாங்கப் படையினர் தாம்மை கடுமையாக சித்திரைவதைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே கல்வியை தொடர்ந்து, நிறுவனமொன்றில் சாதாரண பணியிலிருந்து நிறுவன துணைத் தலைவர் பதவி வரையில் தாம் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மைப் போன்றே அனைவரும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக இளம் தலைமுறையினருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வருதாகவும் தெரிவித்தார்.