Ads
பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% குறைக்க முடிவு
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,. மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது என்றும் அந்நாடு திவால் ஆகும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றும் உலக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 255 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads