தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா - தம்பி ராமையா
அண்மையில் பேட்டி ஒன்றில் தம்பி ராமையா, தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் என்ன கூறுகையில், "ஒரு சில கட்டத்தில் நாம் அனைவருக்கும் அட்வைஸ் செய்வோம். ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலும் நாம் தற்கொலைக்கு முயற்சிப்போம். அப்படி ஒரு சூழல் எனக்கும் வந்திருக்கிறது.
எனக்கு (தம்பி ராமையாவுக்கு) அம்மா என்றால் ரொம்பவே பிரியம். என்னுடைய அப்பா போன்று தனக்கும் கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். என்னுடைய கவிதை எழுதும் திறன் மூலமாகத்தான் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். அம்மாவுக்கும் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட அம்மா ஒரு நாள் இறந்துவிட அந்த சோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அம்மா இறக்கும் போது மகளுக்கு மட்டுமே திருமணம் செய்து வைத்திருந்தோம். ஆனால், மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது தான் அம்மாவின் சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவர்கள் சென்ற இடத்திற்கு நானும் செல்ல முடிவு செய்தேன். அது எனக்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்தேன்.
இன்னொரு கவலையும் இருந்தது. அப்போது நான் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்ஸ் வாங்கிருந்தேன். அதுல ஒரு படம் தான் 'டோரா'. ஒருவேளை நான் தற்கொலை செய்துவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமே என்று நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்கு நயன்தாரா கால் பண்ணி அம்மா இறந்தது குறித்து விசாரிச்சாங்க. அதுதான் எனக்கு டர்னிங் பாய்ண்ட். வாழ்க்கையின் எதார்த்தம் என்ன என்பதை எனக்கு புரிய வச்சாங்க. அதன் பிறகு நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை விட்டுவிட்டேன் என கூறியுள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva