Ads
GCE O/L பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு - சீரற்ற வானிலை காரணமாக நடவடிக்கை
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் 2024 நவம்பர் 05 முதல் நவம்பர் 30 வரை கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பில் 1911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
000
Info
Ads
Latest News
Ads