ஓபனாக போட்டுடைத்த தனுஷ்
தனுஷ் கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷின் நடிப்பும், ஆக்ஷனும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடலும் பெரிதும் கொண்டாடப்பட்டன. அதேசமயம் தனது 50ஆவது படம் இப்படி சொதப்பலான ரிசல்ட்டை வாங்கிவிட்டதே என்று அவர் கொஞ்சம் அப்செட்தான் ஆகியிருப்பார். ஏனெனில், நிறைய செலவு செய்து எடுக்கப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாக ரொம்பவே அடிவாங்கியது என்பதுதான் உண்மை.
நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருக்கும் அவர் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் அவர் இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அதிலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் இட்லி கடை என்ற படத்தையும் அவரே இயக்கி நடித்துவருகிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படங்கள் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார் அவர்.
இந்நிலையில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. என்னை நோக்கி பாயும் தோட்டா பட சமயத்தில் இயக்குநர் கௌதம் மேனனுடன் அவர் செய்த உரையாடலில், “என்னை புரிந்துகொள்வது உண்மையிலேயே கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான். என்னிடம் பழக பழகத்தான் என்னைப் பற்றி முழுதாக புரிந்துகொள்ள முடியும். யாராலும் என்னுடன் பழகிய உடனேயே க்ளோஸ் எல்லாம் ஆகிவிட முடியாது. அதற்கு சில நாட்கள் வேண்டும். அதேசமயம் என்னுடன் க்ளோஸ் ஆகிவிட்டால் என்னைப் பற்றி அவர்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள். ஒரு படத்தில் வசனம் சொல்வேன் இல்லையா, 'என்னை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்' என்று. அதுபோல்தான் என்னுடன் பழக பழகத்தான் புரியும். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் செம பக்குவமாக பேசியிருக்கிறாரே தனுஷ் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva