சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான
நாசூக்காக கூறினார் எம் எஸ் பாஸ்கர்
நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இசைவாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா" பாடல் அருமை...இந்தப் பாடலை ஆடிக்கொண்ட
தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா - தம்பி ராமையா
அண்மையில் பேட்டி ஒன்றில் தம்பி ராமையா, தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார். இது குறி
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
Ads
 ·   ·  1942 news
  •  ·  0 friends
  • 1 followers

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ்

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிப்பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.

மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டிபி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

 குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 490
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads