இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும், வெற்றியும் பெறும் - எம்.ஏ சுமந்திரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் அதில் வெற்றி பெறுவோம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இறுதியாக எடுத்த முடிவு முல்லைத்தீவு தெரிவித்தாட்சி அலுவலர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய வேட்பு மனுவை நிராகரிப்பதாக எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றை எழுத்தாணை கோரி தாக்கல் செய்யப்படும் அதிலே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் என தெரிவித்தார்.