Ads
6 சதவீதம் பணியாளர்கள் நீக்கம்; ஸ்பாடிஃபை அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை எழுந்துள்ளது. இதனால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் பலரை பணிநீக்கம் செய்து வருகிறது.
தற்போது பிரபலமான மியூசிக் தளமான Spotify தனது பணியாளர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஸ்பாட்டிஃபை நிறுவனத்தில் 10 ஆயிரம் பணியாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதால் ஐடி பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.
Info
Ads
Latest News
Ads