Ads
மேம்பாலத்திலிருந்து ரூபாய் நோட்டுகளை பறக்க விட்ட தொழிலதிபர் கைது
பெங்களூர் கே ஆர் மார்க்கெட் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்திலிருந்து இன்று மதியம் திடீரென தொழிலதிபர் அருண் என்பவர் பத்து ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு பணமழை பொழிய விட்டார்.
மேம்பாலத்தில் கீழ் இருந்த மக்கள் ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டோ போட்டி போட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுக்களை பெங்களூர் மேம்பாலத்திலிருந்து பறக்க விட்டவர் அருண் என்ற தொழில் அதிபர் என்று தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
எதற்காக அவர் பணத்தை பறக்க விட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்தி வரும் அருண் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads