Category:
Created:
Updated:
சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ள சூழலில், கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் தங்களுடன் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான தொற்றில்லா சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கனடாவை அடிப்படையாக கொண்ட சி.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனா, ஹாங்காங் அல்லது மக்காவ் நாடுகளில் இருந்து கனடாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் வருகிற 5-ந்தேதி முதல் கொரோனா தொற்றில்லா சான்றிதழை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும் என அரசு அறிவித்து உள்ளது.