·   · 10 news
 •  · 4 friends
 •  · 4 followers

கேரளாவில் மாஸ்டர் படம் வெளியாவதில் பிரச்சினை

image_transcoder.php?o=bx_froala_image&h=76&dpx=1&t=1609998183

கொரோனா லாக்டவுன் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஜனவரி 5 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார். அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதனால் கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 0 0 0 0 0
 • 199
Comments (0)
Latest News
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவுறுத்தலி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அண்மையில் ஒரு கூட்ட மேடையில் பேசும்போது போகிறபோக்கில் முதல்வர் எடப்பா
நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு நேற்றையதினம்  திறந்துவைக்கப
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளமைக்கும் முதற்கட்ட பணி ஆரம்பம்!
அரசினால் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைப
அநுராதபுரத்தில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு கொடுமை
அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன்
இலங்கையில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்த
யாழ் வானில் பறந்த கொரோனா பட்டம்.
வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக
பூரண விசாரணை நடத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றிலி
முடக்கப்பட்ட வவுனியா நகரம்
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகள் 42ம் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ள
முள்ளிவாய்க்கால் தூபி மீளமைக்கும் முழுச்செலவையும் ஏற்கும் திருகோணமலையை சேர்ந்த நபரொருவர்!
யாழில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் நோக்கில் துணைவேந்தர் அ
Featured News
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவருகின்றது.  இதன்காரணமாக மட்டக்களப்பு ம
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட
யாழ். மீசாலையில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மீசாலை – புத்தூர் சந்திக்கு அருகில் நடாத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இ
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு.  அதில் பணியாற்
ஒன்ராறியோவில் மீண்டும் தினசரி சாதனையை முறியடித்து கோவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை 07-12-2020) ஒன்ராறியோவில் கோவிட்-19 சாதனை அளவாக 1,925 பதிவாகியுள்ளது.  டொராண்டோவ
லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்
பிக் பாஸ் 3ல் பங்கேற்று புகழ்  அடைந்த லொஸ்லியா தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார். அவரது தாயும்
Info
Category:
Created:
Updated:
Latest Videos
Happy Mattu Pongal
00:14

Happy Mattu Pongal

Happy Mattu Pongal
Mattu Pongal
00:21

Mattu Pongal

Happy Mattu Pongal
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
00:22

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
01:27

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்                          
கடவுள் அனைவருக்கும்
06:09

கடவுள் அனைவருக்கும்

கடவுள் அனைவருக்கும் ஒரே மாதிரி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல
கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்
00:30

கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்

பிரச்சாரத்தின் போது கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
Corona Video song
01:28

Corona Video song

Song From Bheeshma
03:23

Song From Bheeshma

 •  · 
 •  · srisree
Bheeshma is a 2020 Telugu romantic comedy film directed by Venky Kudumula starring Nithiin and Rashmika Mandanna in lead roles. The film is produced by Suryadevara Naga Vamsi under Sithara Entertainments with Mahati Swara Sagar handling music composition.
Geetha Govindam Movie Scene
01:00

Geetha Govindam Movie Scene

Geetha Govindam Movie Scene
BARATHIKKU KANNAMMA
06:08

BARATHIKKU KANNAMMA

BARATHIKKU KANNAMMA - Vijay Super hit song
Latest Photos
Added news 

image_transcoder.php?o=bx_froala_image&h=94&dpx=1&t=1610776285

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என இலக்கு வைத்துள்ளதாக திரைப்பட நடிகர் விவேக் கூறினார்.


திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்தின் கோசாலை மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் மையம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திரைப்பட நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வைத்து உரையாற்றும்போது சுவாமி விவேகானந்தர் குறித்து கிராம மக்களிடையே எடுத்துக்கூறினார்.


அவரது பொன்மொழிகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார் இதை தொடர்ந்து பொங்கல் திருநாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டு வைத்தேன். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அறிவுறுத்தலின் பேரில் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் வைத்துள்ளேன் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தேவி மற்றும் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். • View
Added poem 

நீ பிறந்த

மண்ணில்

நானும்

பிறந்தேன்

ஒன்றாக

படித்தேன்

என்னையும்..என்

தமிழையும்

நீ ஏன்

வெறுக்கிறாய்?

புறக்கணிக்கிறாய்?உன் மொழியை..நான்

மதிக்கிறேன்

பேசுகிறேன்

நீ ஏன்

பேசவும்

மதிக்கவும்

முடியாமல்

வெறுக்கிறாய்?

ஆன்மீகம்

சொல்லித்தந்த

அன்பு,கருணை,இரக்கம்

உனக்கில்லையா?

எனக்குண்டே!பெரும்பான்மை

இனத்துக்கு

பெருந்தன்மை

வேண்டும்

உன் கரங்கள்

என்னைத்தொட

வேண்டும்

நீயும் நானும்

சகோதரரே

சமத்துவம்

வேண்டுமே!பலத்தோடு

இருக்கிறாய்

புதைத்த

பிணத்தை

புரட்டிப்பார்க்கிறாய்

மூடிய கல்லறையை

இடித்து தகர்க்கிறாய்

இத்தனை பீதியா?

உனக்கு

பயப்படாதே..வா

கைகோர்ப்போம்

சமாதானம்

செய்வோம்...இறந்தோரை

கல்லறையில்

தூங்கவிடு

இறந்தோர்

தூபிகளை

வணங்கவிடு

இத்தனை

வர்மமா

உனக்கு

தர்மமே

போதித்த

புத்தரும்

நானும்

கண்ணீர்

வடிக்கிறோம்

நீயும் நானும்

இறப்பது நியதி

இதைவிட

ஏதுமுண்டோ

உண்மையான

செய்தி....

 • View
Added poem 

கருவில் சுமந்தாள் அன்னை

கருவிழியில் சுமக்கிறாய் நீயடி 

என் உணர்வுகளுக்கு 

உருவம் கொடுப்பவள் நீயடி 


அன்பு ஊற்றெடுக்கும்

அருவி நீயடி

அதில் விழுந்து நீச்சலடிக்கும் 

ஆசை தங்கை நானடி.


என் கனவுகளை

கவலைகளை மொழிபெயர்ப்பவளே

தொப்புள்க்கொடி தோழியடி நீ

துயரத்திலும்

தோள் கொடுப்பவள் நீயடி .


அணைக்க கைகள் இருந்தால் 

அழுவதில் கூட சுகம் தான் 

ஆத்மார்த்த அன்பு உனதடி 

அதை உணர்கிறேன் தினமும் நானடி.அன்றாடம் என் 

அனுபவ பரிமாற்றம் உன்னோடு தானடி 

அதனால் அழுக்குகள் இல்லை

என் மனதில் என்றால் உண்மை தானடி.


அத்திபூத்தாற் போல் 

சில கோபங்களும் 

உண்டாகும் தருணங்களிலேயே 

மண்ணாக்கி விடுவாயடி 

மனம் நொந்து 

மன்னிப்பும் கேட்பாயடி .


புரிந்துணர்வின் 

பொக்கிஷம் நீயடி 

புன்னகைக்க கற்றுக் கொண்டேன் 

உன்னால் நானடி .


எனக்காய் துடிக்கும் 

இதயம் உனதடி 

இன்னொரு தாய் தான்

நீயும் எனக்கடி .


என் விம்பத்தைக் காட்டும்

கண்ணாடி நீயடி 

என் கண்களின் காயமெல்லாம் 

கண்டுபிடிப்பாய் நீயடி.


வாழ விருப்பம் கொண்டேன் 

உன்னால் தானடி 

வலிகள் எல்லாம் 

மறக்க வைத்தவளும் நீயடி .


மறுபிறப்பு ஒன்று

எடுத்து வந்தால் நீ

மகளாய் பிறக்க வேண்டுமடி 

தாயாகி உன்னை 

தாலாட்ட வேண்டும் நானடி. 


சிறந்த வழிகாட்டி நீயடி 

வாழ் நாள்வரை 

சகியடி நீ எனக்கு

சகோதரியே!

 • View
Added news 

image_transcoder.php?o=bx_froala_image&h=93&dpx=1&t=1610774838

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அண்மையில் ஒரு கூட்ட மேடையில் பேசும்போது போகிறபோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை கேலி பேசுவதாக நினைத்து அருவறுப்பான சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக பேசுவது தனக்கு கைவந்த கலை என்பதுபோல், தன் அருகில் இருந்தவர்களைப் பார்த்து அப்போது சிரிக்கவும் செய்தார். பெண்களை கண்ணியக் குறைவாக உதயநிதி பேசியது தமிழகம் முழுவதும் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த மகளிரணி தலைவிகளும், பெண்ணிய அமைப்பினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி அதிமுக மகளிர் அமைப்பினர் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

 • View
Added a post 


சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.

லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.

  ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்

நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
   அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம் உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக
கலந்து கொடு,ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -
என்று கூறினார்.மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
   அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
   மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய லீ லீ மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று 
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள். 
   அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய்
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த
நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து
இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்.


 • View
 • View
Added a video 

Happy Mattu Pongal

 • View

##தெரிந்து கொள்ளுங்கள்## நாம் தினமும்  உணவு  உண்ணும் போது முதலில் காகத்துக்கு உணவளிக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் எமக்கு குறைவாக இருக்கும்.சனியின் தோசம் உள்ளவர்கள் தினமும் இதை செய்து வாருங்கள்.அக்காலங்களில் எமது மூதாதையர்கள் மனித வாழ்வின் மேன்மைக்காக எவ்வளவோ நல்ல விடையங்களை விட்டு சென்றுள்ளார்கள் . அதில் இதுவும் ஒன்று.நாம்தான் எல்லாவற்றையும் மறந்து விட்டோமே...!! அறிந்து கொள்வோம்... தெரிந்து செய்வோம்.


...

 • View
Added news 

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு நேற்றையதினம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில்,  விசேட யாக பூசைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், தைத்திருநாளான நேற்று, நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

அத்துடன், தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 • View
Added news 

அரசினால் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபட பணிகள் புதன்கிழமை  (13) ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என துணைவேந்தர் தெரிவித்தார்.

 • View
Added a post 

22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் முகநூல் மூலம் கணேஷ் என்ற நபரை காதலித்துள்ளார். இருவருக்கு முகநூலில் காதல் மலர, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார். ஆளே இல்லாத பகுதியில் கணேஷ் அந்த பெண்ணிற்கு தாலி கட்டினார்.

இந்த நிலையில் பெண்ணை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது, கணேசுடன் வாழ விருப்பம் என பெண் தெரிவித்ததால் இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் போலீசார் பெண்ணை கணேசுடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வில்லிவாக்கம் பகுதியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்திய போது, அன்றிரவே 17 வயது சிறுமியுடன் வந்த கணேஷ், வீட்டு வேலைக்காக இந்த சிறுமியை வைத்துக்கொள்ளலாம் என கூறி அந்த சிறுமியிடம் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், கணேசிடம் கேட்டதற்கு அவரை அடித்து அடைத்து சித்ரவதை செய்து, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். மேலும் மது அருந்திவிட்டு புது மனைவியின் கைகளை கட்டியும், வாயை பொத்தியும் நாசம் செய்துள்ளான்.

கொடுமை தாங்க முடியாத புது மனைவி, தான் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சமாதானப்படுத்துவது போல நடித்து தனது நண்பர்களை வரவழைத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் உதவி கேட்ட இளம்பெண், அங்கிருந்து தப்பி வந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவனை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது போல 11 பெண்களை திருமணம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதை அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

ஏற்கனவே கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவன் பல பெண்களை ஏமாற்றி தற்போது கம்பி எண்ணி வரும் நிலையில், வெறும் 22 வயதில் 11 திருமணம் செய்துள்ள காமக்கொடூரனின் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 • View
 • View
 • View
Added a video 

Happy Mattu Pongal

 • View
 • View
 • View
 • View
 • View
 • View
 • View
Added news 

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதான விடுதி கண்காணிப்பாளர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் சிறுவர் இல்லத்திலிருந்த 50 சிறுவர்களிடமிருந்து பொலிசார் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுவர் இல்லத்தில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏராளம் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 • View
 • View
Added news 

நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர். 

அத்தோடு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் தவிசாளர் த.தியாகமூர்த்தியினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தவிசாளர் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • View
 • View
Added news 

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 • View
... or jump to: