Category:
Created:
Updated:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடகவியலாளர் மாநாடுகளில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (15) முதல் பெரமுனவின் ஊடக சந்திப்புகளில் இத்திரை பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக, டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் பெரமுனவின் முக்கியஸ்தருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .