Ads
ஆப்கானில் ஜனாதிபதி மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பக்ரீத் தொழுகையின் போது ஜனாதிபதி மாளிகை அருகே மூன்று ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாவில்லை. ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானின் எதிரிகள் காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். அனைத்து ராக்கெட்டுகளும் மூன்று வெவ்வேறு பகுதிகளைத் தாக்கின. எங்கள் ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், எங்களுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிர்வாஸ் ஸ்டானிக்ஸாய் கூறினார்.
Info
Ads
Latest News
Ads