இராணுவத்தின் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி வைத்தியர் செல்வி அலாகா சிங் நேற்று (15) விகார மகா தேவி பூங்காவில் நிறுவப்பட்டிருந்த இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு மேற்கொண்ட முன்னறிவித்தல் இன்றிய விஜயத்தின் போது ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைவாக, இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் இலக்கை நோக்கிய தடுப்பூசி திட்டம், தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் மிகப் பெரிய பங்கை வகிப்பதாக சுட்டிக்காட்டினார்.
"இலங்கையின் தடுப்பூசி வழங்கல் முயற்சிகள் மிகவும், பாராட்ட தக்க வகையில் அமைந்துள்ளதோடு முக்கியமானதொரு பங்களிப்பை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. அதேபோல் எந்தவொரு அவசர நிலைமைக்கும் முகம்கொடுக்க தக்க வகையில் வைத்தியர்கள் மற்றும் அம்பியூலனஸ் வண்டிகள் தயார் நிலையில் இருப்பதோடு, அவசர நிலைமைகளை கையாளும் முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். அதேபோல் அரசாங்கத்தின் தேசிய இலக்குகளை நோக்கிய பயணத்துக்கும் ஊக்குவிப்பாக அமையும் எனத் தெரிவித்த அவர் உலக சுகாதார அமைப்பு அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு பக்க பலமாக நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
மேற்படி விஜயத்தின் போது வைத்தியர் செல்வி அலாகா சிங் விகார மகா தேவி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கல் பணிகளை கண்காணித்ததோடு, அடுத்த இரு நாட்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இராணுவ வைத்திய குழுக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.