அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.91 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 18,91,35,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,27,74,956 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 74 ஆயிரத்து 032 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,22,86,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79,152 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் புதிய பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.