Ads
கேரளாவல் அதிகரித்து வரும் ஜிகா வைரஸ்
கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து இருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், கேரளாவில் இன்னும் நாள்தோறும் சராசரி பாதிப்பு உச்சத்தை தொட்டே வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது :- கேரளாவில் ஏற்கனவே 19 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம், என தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads