Ads
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அதன்படி 26,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசிகளின் 26 ஆயிரம் டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை மொத்தமாக 8,571,000 கோவிசீல்ட், சினோபார்ம், ஸ்புட்னிக் V மற்றும் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. \
அவற்றில் 5,330,492 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
Info
Ads
Latest News
Ads