ருஹுணு மஹா கதிர்காம ஆலய எசல பெரஹரவில் கலந்து கொண்ட பிரதமர்
வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹர – 2021 ஆரம்பிக்கப்பட்ட நேற்றைய தினத்தில் (10) நடைபெற்ற இரவு மங்கள பெரஹரவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் கலந்து கொண்டனர்.
கதிர்காமம் எசல திருவிழாவின் பிரதான நிகழ்வாக வருடாந்தம் நடைபெறும் பெரஹர தனித்துவமான பாரம்பரியங்கள் மற்றும் சடங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்படும்.
கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக இம்முறை எசல பெரஹர சுகாதார வழிகாட்டல்களுக்கமைய பொதுமக்களின் பங்கேற்பின்றி ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவிழா நடைபெறும் சந்தர்ப்பத்தில் ருஹுணு மாகம் பத்துவே பிரதான சங்கநாயக்கர் கிரிவெஹர ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த தேரர் மற்றும் ருஹுணு மாகம்பத்துவே பிரதான நீதிமன்ற சங்கநாயக்கர் கபுகம சரணதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.