சினிமா செய்திகள்
பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவ
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2566 news
  •  ·  1 friends
  • 1 followers

இலங்கை வருகைதரும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள்

தேசிய இன விவகார ஆணையகத்திற்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, 2025 பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கையில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். தமது ஒரு வார கால அதிகாரப்பூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அத்துடன், அமைச்சர் பான் தனது பயணத்தின் போது கண்டிக்கும் செல்ல உள்ளார். இதற்கிடையில், சீனா, இலங்கையின் வடக்கில் தொடர்ந்து அதிக வாழ்வாதார உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஸ யான்வே, இன்றும் நாளையும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்று அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2,470 உணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு, சீன அரசாங்கம் அன்றைய கடற்றொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வீட்டுவசதி அலகுகள், அரிசி மற்றும் கடற்றொழில் வலைகள் உள்ளிட்ட 1.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது

அத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் சீனத் தூதர் குய் ஜென்ஹாங் வடக்கிற்கு விஜயம் செய்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் 12 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

  • 595
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads