சினிமா செய்திகள்
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2558 news
  •  ·  1 friends
  • 1 followers

உக்ரேன் ஜனாதிபதி சர்வாதிகாரி - கடுமையாகச் சாடிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார்.

மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் ஜெலென்ஸ்கி தனது நாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ட்ரம்பின் இந்த கருத்தானது இரு தலைவர்களுக்கிடையிலான பகையை ஆழப்படுத்தியதுடன் ஐரோப்பிய அதிகாரிகளையும் எச்சரித்தது.

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கு உக்ரேன் தான் காரணம் என்று ட்ரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் – ரஷ்யா - உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறை மொஸ்கோவிற்கு பயனளிக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நடுகளிடையே கவலைகளை அதிகரித்தது.

அவர் ஜனாதிபதியாக ஒரு மாதத்திற்குள், போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, சவுதி அரேபியாவில் உக்ரேனை ஓரங்கட்டிய மூத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரி என்றும் சாடினார்.

இதற்குப் பதிலளித்த உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha, தனது நாட்டை விட்டுக்கொடுக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 இல் முடிவடைய வேண்டும், ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் 2022 பெப்ரவரியில் விதித்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது.

சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - ரஷ்யா பேச்சுவார்த்தையில் கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி மொஸ்கோவால் நிர்வகிக்கப்படுவதாக சாடிப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ட்ரம்பை தாக்குவதற்கு எதிராக ஜெலென்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 535
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads