Category:
Created:
Updated:
இலங்கை தொழிலதிபரும் பெருமைக்குரிய 'தினக்குரல்' நாளிதழின் நிறுவுநருமான எஸ். பி. சாமியின் மறைவுக்கு இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதரகமானது இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் பத்திரிகைத்துறையிலும் தொழில்துறையிலும் அவர் ஆற்றிய தொண்டுகள் சிறந்த முன்னோடியாக தலைமுறைகளை ஊக்குவிக்கும். இந்த கடினமான தருணத்தில், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், 'தினக்குரல்' குழுவிற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.