Category:
Created:
Updated:
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
00