சினிமா செய்திகள்
பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவ
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2566 news
  •  ·  1 friends
  • 1 followers

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதே இறுக்கமான பிணைப்பை உருவாக்கும் - யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு

நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை கொண்டதாகவும் இருக்கும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஊடகவியலாளர்களை நேற்றையதினம் (22.02.2025) யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் வாஸ்த்துதலத்தில் நட்பு ரீதியாக சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு இராஜதந்திர உறவுகளை முன்னெடுக்கும்  நிறுவனம் இந்திய துணைத் தூதரகமாகவே இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு இந்த துணைத் தூதரகத்தை நாம் இங்கு ஆரம்பித்தோம்.

வடக்கு மக்களுக்கு நாங்களே நிரந்தரமானவர்கள். ஏனைய நாடுகளைப் போன்று தங்களுடைய மக்களின் நலனுக்காகவோ அல்லது பொருளாதார ஒத்துழைப்புக்காகவோ நாங்கள் தூதரகத்தை ஆரம்பிக்கவில்லை. இதுவே யாழ்ப்பாணத்தில் இந்த தூதரகம் ஆரம்பிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது.

மேலும், ஏனைய உலக நாடுகள் கொழும்பிலேயே தமது தூதரகங்களை அமைத்துள்ளன. தூதரகங்களின் பொதுவான சேவைகள் தங்களின் நாட்டு மக்களுக்கான நலன்களை பார்ப்பது அல்லது பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதே முக்கிய கடமையாக இருக்கும்.

ஆனால், வடக்கு மக்களுக்காகவும் இங்குள்ள மக்களுக்கு சேவையாற்வுவதற்காகவுமே யாழ்ப்பாணத்தில் தூதரகத்தை நாம் ஆரம்பித்தோம்.

இதேநேரம் கடந்த காலத்தில் இந்தியாவால் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இதில், 47 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆயிரம் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் இந்தியாவிலிருந்து பிரதமர் இங்கு வரும்போதோ அல்லது இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஒருவர் அங்கு செல்லும் போதோ அல்லது உயர்மட்ட சந்திப்புகளின் முடிவில் ஊடக வெளியீடுகளை பார்த்தால் அதில் இருக்கும் விடயங்கள் 75 முதல் 80 வீதமானவை வடக்கு தொடர்பானவையாகவே இருக்கின்றன.

இதேநேரம் மற்ற நாடுகளுக்கான இராஜந்திர உறவுகளுக்கும் எமது நாட்டுக்குமான இராஜதந்திர உறவுகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் இங்கு வந்து விட்டு திரும்பி விடுவார்கள். நாம் மட்டுமே நிரந்தரமாக உங்களுடேனேயே இருக்கிறோம். வடக்கில் நாம் செயல்படுத்தும் சகல திட்டங்களையும் நாம் மானியமாகவே வழங்குகிறோம் என்று  தெரிவித்திருந்ததுடன்

நாம் நண்பர்களாக இருப்பதைவிட உடன் பிறந்த சகோதரர்களாக இருப்பதே சிறந்ததாகும். இதுவே உறவுகளையும் மேம்படுத்தும். சகோதரர்கள் என்றும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்காத சகோதரர்களாகவே இருப்பார்கள். நீங்கள் எந்நேரமானாலும் எமது கதவுகளை தட்டலாம்.  உங்களுக்காக எமது கதவுகள் என்றும் திறந்திருக்கும்.

அதனடிப்படையில் யாழ் இந்திய துணைத்தூதகமும்  யாழ்ப்பாண ஊடகவியாளர்களும் சகொதரர்களாகவே இருக்கவேண்டும் என விரும்பகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நட்பு ரீதியான சந்திப்பின்போது யாழ் இந்திய துணைத்தூதுவராக அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாணத்தின் அதிகளவான ஊடகவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைப்பரிமாறிக் கொண்டதுடன் ஊடகவியலாளர்கள் தமது இதர புலமைகளை கலையுணர்வுடன் நிகழ்வுகளாக வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

  • 317
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads