விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? அங்கு நடக்கும் அன்றாட பிரச்சினைகள் என்னென்ன? உறவுகளுக்கிடையே எப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதை தத்ரூபமாக தன் படங்களின் மூலம் எடுத்துரைப்பதில் கில்லாடி நம்ம விசு.
முதலில் நாடகம் :என்னதான் அவரின் படங்களில் போராட்டம் கலந்த வாழ்க்கைப் பயணம் இருந்தாலும் அதையும் எப்படி நகைச்சுவையுணர்வோடு சொல்லலாம் என்பதிலும் கோல் அடித்திருப்பார் விசு. சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற படங்கள் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு முன் அவர் நாடகத்தில்தான் பெரிய அளவில் பேசப்பட்டார். அதை அறிந்த பாலச்சந்தர் தன்னுடன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம்: படங்களை இயக்குவது, நடிப்பது, பாலசந்தர், ஏவிஎம் படங்கள், முக்தா பிலிம்ஸ் படங்கள் என இவர்கள் தயாரிக்கும் படங்களின் கதை விவாதித்தலிலும் தன்னை இணைத்துக் கொண்டார் விசு. இப்படித்தான் பிரபு நடித்த சின்ன மாப்ளே படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கேன்சல் செய்ய சொல்லி அதன் கதையை ஒரே இரவில் மாற்றி அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவி புரிந்தவர் விசு.
இந்த நிலையில் தயாரிப்பாளர் டி. சிவா விசுவை பற்றி குறிப்பிடுகையில் கோபிச்செட்டி பாளையத்திலிருந்து சென்னைக்கு டிரெயின் டிக்கெட் போடச் சொல்ல அந்த நபரின் கவனக் குறைவால் விசுவின் டிரெயின் டிக்கெட் கேன்சல் ஆகிவிட்டதாம். ஆனால் சென்னைக்கு போக வேண்டிய கட்டாயம். டி.சிவா காரில் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியும் கார் எனக்கு அவ்வளவு தூரம் செட்டாகாது என செகண்ட் கிளாஸ் கோச்சில் ஏறி சக பயணிகளுடன் டிரெய்னில் ஏறி சென்றாராம் விசு.
கூடவே கிரேஸி மோகனும் செல்ல அது உட்கார்ந்து போவது மாதிரியான இருக்கையாம். கிரேஸி மோகன் தோளில் சாய்ந்து தூங்கியவாறு இரவு முழுக்க உட்கார்ந்தவாறே சென்றிருக்கிறார்.மறு நாள் டி.சிவா நேராக விசுவின் காலில் விழுந்து இதற்காக மன்னிப்பு கேட்டாராம். என்னுடைய உதவியாளர் செய்த தவறுக்காக என்னை மன்னித்துவிடுங்கள் என கூற டிரெயின் டிக்கெட் கேன்சல் ஆனால் நீ என்ன பண்ணுவ? என சொல்லி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாராம் விசு. ஆனால் இப்ப உள்ள நடிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்களா?
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva