சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2853 news
  •  ·  1 friends
  • 2 followers

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் – ஐ. தே. கட்சியின் தவிசாளர் வஜிர

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

அதனாலே பிரபுக்கள் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் கரந்தெனிய தொகுதியில் கடந்த வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் -

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் பலரும் கதைத்து வருகின்றனர். அரசங்கம் அவர்களின் பாதுகாப்பை குறைத்து வருவது தொடர்பாகவும் பலரும் கதைத்து வருகின்றனர்.

இவ்வாறு இருந்தாலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக மஹிந்த ராபக்ஷ இந்த நாட்டில் 30 வருடமாக இருந்து வந்த பங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இறுதியாக தலைமைத்துவம் வங்கிய ஒருவர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனிமையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுவர முடியுமா? இந்தியாவின் புத்தகயாவுக்கு சென்றுவர முடியுமா?.

அவரை வெறுக்கக்கூடிய நபர்கள் இன்னும் இருக்கலாம். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம். அதனால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் இதனைவிட புத்திசாதூரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

எமது நாட்டின் அரச தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜாபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ் போன்றவர்கள் மயிரிலையில் உயிர் தப்பி இருக்கி்ன்றனர். ஜே.ஆர். ஜயவர்த்தனவை நாடாளுமன்றத்தில் குண்டு வீசி கொல்ல முயற்சித்தனர்.

2001 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது வீடமைப்பு அமைச்சராக நானே இருந்தேன். அப்போது கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு நான் அறிவித்திருந்தேன்.

அபோது லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டையும் மீள ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தேன். இதன்போது அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசுங்க, கதிர்காமருக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டை தொடர்ந்து அவருக்கு வழங்குமாறும் தெரிவித்தார்.

அப்போது அவர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார். அது மாத்திரமல்லாது, அவரின் பாதுகாப்புக்கு 140 பாதுகாவலர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.

ஆனால் 2004 ஆம் ஆண்டு எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போனது. அந்த காலப்பகுதியில் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். இதுதான் வரலாறு.

அதனால் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும்.

அதனால் அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ் நாட்டு மக்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக சென்றுவர வழி ஏற்படுத்திக்கொடுத்த ஒரு தலைவர்.

அதனால் ஒருசில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். எமது தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு இணங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது.

அதனாலே பிரபுக்களின் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 564
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads