புதிய ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று (27.01.2025) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல 21 ஆம் திகதி முதல் மே மாதம் 09ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒன்லைன் முறையின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியாகியிருந்த நிலையில், பெறுபேறுகளின் மீள் திருததத்திற்கு பெப்ரவரி 06ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
000