சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
Ads
 ·   ·  13 news
  • 3 members
  • 3 friends

அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை! - சத்குரு பேச்சு

அஜர்பைஜானில் பாகு நகரத்தில் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சத்குரு அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண் வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

சத்குரு பேசுகையில், நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி புழு மற்றும் மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால் நாம் வலிமையாக வாழ முடியாது. 

நீண்ட காலமாக நிலம் பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால் அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்த போக்கு பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம்.

ஆனால் அப்படி இல்லை நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை எனத் தெரிவித்தார். 

அழிந்து வரும் மண் வலம் குறித்து சத்குரு பேசுகையில் "மண் அழிவு என்பது மிக தீவிரமான பிரச்சனை. ஆனால் இதை பற்றி யாரும் பேசுவதில்லை, கடந்த இரண்டு COP மாநாடுகளில் இதனை நாம் வலியுறுத்தி வருகிறோம். பூமியில் உள்ள உயிரினங்களில் 60% மேலாக மண்ணுக்கு அடியில் உள்ளன.  

நாம் தொடர்ந்து படிம எரிபொருள் பற்றி பேசுகிறோம். அது நடந்தாக வேண்டும். அந்த மாற்றம் தேவை தான். ஆனால் குறிப்பிடத்தகுந்த தொழில்நுட்ப புதுமை இல்லாமல் இது நிகழப் போவதில்லை. நானும் நீங்களும் கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே இந்த உலகம் எண்ணெய்  பயன்பாட்டை கை விட்டுவிடாது. சரியான மாற்று வழிகள் உருவாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில் மண் வளம் காப்பதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் பேசினார். அதன் பிறகே முதல்முறையாக காலநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டில் ‘காலநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு மண் வளம் மேம்படுத்துவதன் மூலம் தீர்வினை கொண்டு வர முடியும்’ என்ற உரையாடல்கள் துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

மண் வளத்தினை மேம்படுத்துவதற்காக மண் காப்போம் என்ற உலகளாவிய இயக்கத்தை சத்குரு அவர்கள் 2022-ஆம் ஆண்டு துவக்கினார். உலகளவில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு நாட்டு அரசாங்கங்களை செயல்பட வலியுறுத்தியும் 30,000 கி.மீ பயணம் மேற்கொண்டார். இவ்வியக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கப்பட்டன. 

விவசாய மண்ணை மீட்டுருவாக்குவதற்காக UNFCCC-யிடம் இவ்யியக்கம் வழங்கியிருக்கும் சமீபத்திய பரிந்துரையை 69 முக்கிய உலகளாவிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளது. இது இவ்வியக்கத்தின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

  • 910
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads