கர்ப்பிணி மனைவியை ஆடையில்லாமல் தெருவில் இழுத்துச் சென்ற கணவன்
ராஜஸ்தான், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த நபருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார்.
கள்ளக்காதலனை பார்ப்பதற்காக கர்ப்பிணி சென்றுள்ளார். இதையறிந்த அவரது கணவர் கர்ப்பிணி மனைவியை தரதரவென்று ரோட்டிலிருந்து வீட்டிற்குள் இழுத்து வந்து கடுமையாக துன்புறுத்தி தாக்கியுள்ளார்.
மனைவியின் ஆடைகளை நீக்கி சாலையில் ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்கன்யா சோனி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. அப்போதுதான் குற்றங்கள் குறையும். பழங்கால சாஸ்திரங்களில் பெண்கள் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் பெண்கள் மீதான வன்முறையும் அட்டூழியங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய வழக்கில் 14 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.