Category:
Created:
Updated:
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், இதனால் அங்கு தொடர்ச்சியாக மீட்புப் பணகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.