சினிமா செய்திகள்
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
Ads
 ·   ·  2852 news
  •  ·  1 friends
  • 2 followers

புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவையான வசதிகளை வழங்க முடியும் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

 

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற "அபிமன் 2024" நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அன்று நீங்கள் நாட்டுக்காக பணம் ஈட்டவில்லை என்றால், இன்று நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தோம்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து இந்த நாட்டை மீட்க முடியும் என்று நான் நம்பினேன். ஏனைய நாடுகளைப் போன்று அன்றி, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய முன்பே நாட்டை மீட்டெடுத்தோம்.

நாங்கள் கடினமான பயணத்தை கடந்து வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் நினைத்தனர். தொழிற்சாலைகளை நடத்த எரிபொருள் இல்லை. சுற்றுலா பயணிகள் யாரும் நாட்டுக்கு வரவில்லை. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு உள்ளது. இதை எப்படி செய்தோம் என்று உலகின் பல நாடுகள் கேட்கின்றன. பங்களாதேசின் கடனை நாம் செலுத்திவிட்டோம். இன்று பங்களாதேசில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாம் நெருக்கடிக்கு உள்ளான காலங்களில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அந்த நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

நாம் இப்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது அவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகள் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

02 வருடங்கள் துன்பப்பட்டோம். இரண்டு வருடங்களாக உங்கள் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னெடுத்துச் சென்றேன். அதன் பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நாம் அனைவரும் இணைந்து புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பணியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை உங்களால் இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். இன்று, அந்த வாய்ப்பு பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றது.

இலங்கைத் தொழிலாளர்களை அந்த நாடுகளுக்கு அனுப்ப முடியுமானால், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும். நீங்கள் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து இதுகுறித்து நீங்கள் பணியாற்றலாம். அப்போது உங்கள் தொழில்துறை மேலும் விரிவடையும். அந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் உங்களுக்கு அரசாங்கமாக ஆதரவை வழங்க முடியும்.

மேலும், அந்த நாடுகளுக்கு அவசியமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடிந்தால், அதற்கு அரச ஆதரவை வழங்க முடியும். நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் தங்கி நிற்க முடியாது.

மேலும், நாட்டின் எதிர்கால நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதை நினைவுகூர்ந்து, உங்களின் எதிர்கால பணிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

000

  • 429
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads