ஆறு மாதத்தில் 4,981 பில்லியன் ரூபா கடனை மிளச் செலுத்தியது இலங்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு !
இலங்கை அரசாங்கமானது இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலான ஆறு மாதக் காலப்பகுதியில் 4,981 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 'மவ்பிம' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
அத்துடன் இது பத்திரங்கள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்பட்ட கடனின் பெறுமதியை விட 129 பில்லியன் ரூபா அதிக கடன் தொகை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதே காலப்பகுதியில் அரசாங்கம் பத்திரங்கள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மூலம் மொத்தமாக 4,852 பில்லியன் ரூபா கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பணத்தைப் பெறாமலேயே உரிய கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவம் பணச் சந்தையில் கடன் செலுத்தும் அபாயத்தைக் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியில் இருந்து பணத்தை அச்சிடாமல் அரசாங்கம் கடனை அடைத்தால் நாடு ஒருபோதும் உயர் பணவீக்கத்தை நோக்கி நகராது எனவும் கடனை செலுத்துவதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்கள் உரிய முறையில் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000