அதிக லைக்ஸ் பெற 10 கிலோ உணவை சாப்பிட்ட யூட்யூபர் உயிரிழப்பு
சீனாவில் உணவு வீடியோக்கள் செய்து பிரபலமானவர் பான் ஜியோடிங் என்ற பெண்.
இவர் உணவுகளை அதீதமாக சாப்பிடுவது, உணவு ரிவ்யூ என பல வீடியோக்களை செய்து பிரபலமானார். ஆனால் அதேசமயம் அதீதமான உணவுகளின் காரணமாக இவர் உடல் எடை வேகமாக அதிகரித்தது. 120 கிலோ எடையில் இருந்த பான் ஜியோடிங் சமீபத்தில் உணவு செரிமான கோளாறு தொடர்பான சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து வெளியான சில நாட்களிலேயே உணவு சேலஞ்ச் ஒன்றை லைவ் வீடியோவாக தனது சேனலில் செய்துள்ளார். சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு லைவ் செய்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவர் அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிமானமாகாமல் இருந்ததுமே அவர் உயிரிழக்க காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.