Category:
Created:
Updated:
நிதி நெருக்கடி மற்றும் மருத்துவ நெருக்கடியை சந்தித்திருக்கும் தமிழகத்திற்கு, பொதுமக்கள் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும், திமுகவினர் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏவும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, ரூ. 25 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இந்த நிலையில், திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களின் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.