கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியான குல்வீந்தர் கவுர் திடீரெ கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவருடைய உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் அந்த பெண் பொலிஸ் அதிகாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் கங்கனா சோதனையை முடித்து கொண்டு விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரூபாய் 100 அல்லது 200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா தெரிவித்திருந்தார் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் தனது அம்மாவும் ஒருவர்” எனவும் பொலிஸ் அதிகாரி குல்வீந்தர் கவுர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.