சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
Ads
 ·   ·  8230 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள்

வருகின்ற ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பு நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புதன், வியாழன், சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் வானத்தில் தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு சில கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் எனவும், ஒரு சில கோள்களைப் பெரிய தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதனால் இந்த நிகழ்வு நடக்கிறது, இது ஒரு அரிய நிகழ்வா என்ற கேள்விகளை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தின் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவனிடம் முன்வைத்தோம்.

இந்நிகழ்வு குறித்து விளக்கிய அவர், “இது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வுதான். சுற்றுப்பாதையில் சுற்றி வரும் 8 கோள்களும் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் சுழற்சியின் ஒரு கட்டத்தில் அனைத்துக் கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வே இது," என்றார்.

“இப்படியான நிகழ்வின்போது குறிப்பிட்ட எல்லா கோள்களையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையும்.”

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “ஒரு மைதானத்தில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தை நடுவில் இருந்து நீங்கள் பார்க்கும்போது ஓட்டப்பந்தய வீரர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் ஓடிவரும் வேகத்திற்கு ஏற்ப வெவ்வேறு திசைகளில் பார்க்க முடியும். ஆனால் ஏதோவொரு புள்ளியில் ஒரு சிலர் மட்டும் ஒரே நேர்க்கோட்டில் தெரிவார்கள். அதுபோன்ற நிகழ்வுதான் இதுவும்,” என்று விளக்குகிறார்.

ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி நடக்கவுள்ள இந்த நிகழ்வின்போது, நிலா உள்பட மேற்கூறிய 6 கோள்களும் சூரிய உதயத்திற்கு முன்பு வானில் தெரிய உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “இவை ஜூன் 1ஆம் தேதியில் தொடங்கி 4ஆம் தேதி வரை, வானில் கிழக்கு திசையில், சூரியன் உதிப்பதற்கு முன்பு உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் கண்களுக்கும் தெரியும்” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

என்னதான் நிலா மற்றும் 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்து காட்சியளித்தாலும், எல்லா கோள்களையும் மனிதர்களால் நேரடியாகப் பார்த்துவிட முடியாது. சூரிய உதயத்தைப் பொறுத்தே அது சாத்தியப்படும் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன்.

“அடிவானத்தில் தோன்றும் இந்தக் கோள்களை மேடான இடத்தில் நின்று பார்க்கலாம். ஆனால், தற்போது பருவகாலம் என்பதாலும் இவற்றைப் பார்ப்பதில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக” கூறுகிறார் அவர்.

சூரிய ஒளியின் வெளிச்சம் வந்துவிட்டாலும் இந்தக் கோள்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் அவர்.

மேலும், இவற்றில் “புதன் கோள் சூரியனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் 300 கோடி கி.மீ. தொலைவில் இருப்பதால், அவற்றை மிகப்பெரிய தொலைநோக்கிகள் கொண்டு மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்ணுக்கோ அல்லது பைனாகுலருக்கோ தெரியாது” என்கிறார் அவர்.

இதே கருத்தை முன்வைத்த வெங்கடேஸ்வரன், “வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகிய கோள்களை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்” என்கிறார்.

மேற்கூறிய கோள்கள் கண்ணுக்குத் தெரிவது சூரிய வெளிச்சம் மற்றும் மேகங்களின் நிலையைப் பொறுத்து மாறலாம்.

இருப்பினும், இவற்றைப் பார்க்க விரும்புபவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துகொண்டு இவற்றைப் பார்ப்பது கடினம். மாறாக கடற்கரை, உயரமான மலைகள் அல்லது எந்த கட்டடமும் அருகில் இல்லாத பெரிய கட்டடங்களில் இருந்து இவற்றை நேரடியாகப் பார்க்கலாம் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்த நிகழ்வை அரிதாக நிகழும் ஒன்று எனக் கூற முடியாது என்றாலும், ஒரே வரிசையில் 6 கோள்களை நேரடியாகப் பார்க்க முடிகிற நிகழ்வு என்பதால் இது கவனம் பெறுகிறது என்று கூறுகிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

மேலும் இது அடிக்கடி நிகழ்வதுதான் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன்.

அவர் கூறுகையில், “இதற்கடுத்து வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடைபெறும். அதற்கடுத்து 2025ஆம் ஆண்டும் இதே போன்ற நிகழ்வு ஏற்படும். அப்படியே வருகின்ற காலத்தில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கலாம்” என்கிறார் அவர்.

பொதுவாகவே இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இதர அறிவியல் அமைப்புகள் அந்த நிகழ்வைப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

ஆனால், இந்த நிகழ்விற்கு அப்படி எதுவும் ஏற்பாடு இல்லை என்று தெரிவித்தார் லெனின் தமிழ்க்கோவன்.

  • 835
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads