Ads
ராட்சத பலூன்கள் மூலம் குப்பைகளை வீசுகிறது வடகொரியா
வடகொரியா ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளதுடன் இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் பேட்டரிகள், இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அத்துடன் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
Info
Ads
Latest News
Ads