Ads
பசிபிக் பெருங்கடல் சக்தி வாய்ந்த நில அதிர்வு - சர்வதேச ஊடகங்கள் தகவல்
பசிபிக் பெருங்கடலின் தெற்கேயுள்ள ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வனுவாட்டு தீவின் தலைநகரான போர்ட் விலாவிற்கு வடமேற்குப் பகுதியில் இருந்து 83 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற் பகுதியில் குறித்த நில அதிர்வு, மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நில அதிர்வு சுமார் 29 கிலோமீற்றர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதுடன், சுனாமி தொடர்பிலான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads