மதுபானங்களின் விலை அதிகரிப்பு
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் இன்று முதல் திருத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாய் ஆக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000 ரூபாயாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.