Ads
நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் - பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையில்
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்காக 18 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000 இற்கும் அதிகமான தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் சுகாதாரத் தரம் தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads