இந்திய மீன்பிடி படகின் ஓட்டிக்கு 40இலட்சம் தண்டப்பணம் கட்டத்தவறின் 9 மாத சிறை தண்டனை
இந்திய மீன்பிடிபடகின் ஓட்டிக்கு(40இலட்சம்) ரூபாய் தண்ட பணம்.(4 மில்லியன் ரூபாய்) தண்டப்பணம்
கட்டத்தவறின் 9 மாத சிறை தண்டனை ஏனையவர்கள் விடுதலை.
ஏனைய மீனவர்கள் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடசிறைத் தண்டனை உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த படகில் இரண்டு சிறுவர்கள் இருந்த நிலையில் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் 8 ஆம் தேதி ஒரு படகுடன் பத்து இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடல் பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மீதான வழக்கு இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதவான் நளினி சுபாகரன் 10 இந்திய மீனவர்களில் 8 மீனவர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த மீன்பிடி படகின் ஓட்டிக்கு 9 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.
இந்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.