பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவிப்பு
சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் - சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000